வெள்ளித்திரையில் முன்னணி நடிகைகளாக கொடிகட்டி வந்த பல நடிகைகளும் திடீரென்று சின்னத்திரையில் நடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அதிலும் ஒரு சில முன்னணி நடிகைகள் சின்னத்திரை நடிக்கும் பொழுது பெரும் அதிர்ச்சியாக உள்ளது. அந்த வகையில் தொடர்ந்து பல வெற்றித் திரைப்படங்களை தந்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் தான் நடிகை தேவயானி.
இவர் திடீரென்று சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சீரியலில் நடிக்க ஆரம்பித்தார் அதேபோல் சீரியலும் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இப்படிப்பட்ட நிலையில் சில வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சன் டிவியுடன் இணையவுள்ளார்.
பொதுவாக முன்னணி நடிகைகளாக வலம் வந்த ஒருவர் சின்னத்திரையில் நடிப்பது கடினமான ஒன்று ஆனால் தேவயானி தொடர்ந்து சின்னத்திரையில் நடித்திருந்தார். இந்நிலையில் சித்தி, கோலங்கள், திருமதி செல்வம், மெட்டிஒலி போன்ற தற்பொழுது வரையிலும் மறக்க முடியாத பல ஹிட் சீரியல்களை சன்டிவி கொடுத்துள்ளது.
இவ்வாறு வெற்றி சீரியல்களை தொடர்ந்து கொடுத்து வந்த சன் டிவியில் சமீபகாலங்களாக இளசுகள் விரும்பும் வகையில் முழுக்க முழுக்க காதலை மையமாக வைத்து சீரியல்களை இயக்கி வருவதால் தற்பொழுது டிஆர்பி கொஞ்சம் அடி வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இப்படிப்பட்ட நிலையில் தேவையானி நடித்திருந்த கோலங்கள் சீரியலை இயக்கிய திருச்செல்வன் என்பவர் மீண்டும் ஒரு சன் டிவியில் புதிய சீரியல் ஒன்றை இயக்க உள்ளாராம்.கனடத்தில் வெற்றி பெற்ற சீரியல் ஒன்றை தமிழில் ரீமேக் செய்ய உள்ளார்கள். மேலும் இந்த சீரியல் 5 பெண்களின் கதைகளை மையமாக வைத்து எடுக்கப்படுவதாகவும், பெரும்பாலும் காமெடி கலந்த சீரியலாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. எனவே தற்பொழுது இழந்த மார்க்கெட்டை மீண்டும் இந்த சீரியலின் மூலம் பெற்று விடலாம் என்று சன்டிவி முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.