Metti Oli 2: தொலைக்காட்சி சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் விரும்பி பார்த்து வருகின்றனர். அதோடு மட்டுமல்லாமல் குடும்ப இல்லத்தரசிகளுக்கு பொழுது போக்காகவே சீரியல் அமைந்து வருகிறது இதன் காரணமாக ஏராளமான தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு புதிய சீரியல்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக பல சீரியல்களை அறிமுகப்படுத்தி டிஆர்பி-யில் டாப்பில் இருந்து வரும் தொலைக்காட்சி தான் சன் டிவி. காலை முதல் இரவு வரை ஏராளமான சீரியல்களை ஒளிபரப்பாகி வரும் சன் டிவியின் சீரியலுக்கு மக்கள் மத்தியில் பேராதரவு உள்ளது.
செத்தும் கெடுத்தா மேகனா.. மொத்த சொத்தும் போச்சு என கதறும் கலிவரதன் மற்றும் அர்ஜுன்..!
அந்த வகையில் தமிழில் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் இந்த நான்கு தொலைக்காட்சி சீரியல்களுக்கு தான் மக்கள் மத்தியில் மவுசு உள்ளது. முக்கியமாக டிஆர்பியில் சன் டிவி, விஜய் டிவி சீரியல்கள் போட்டி போட்டுக் கொள்ளும் நிலையில் சமீப காலங்களாக சன் டிவி சீரியல்களே டாப்பில் உள்ளது.
இந்த சூழலில் தற்பொழுது சன் டிவியின் ஃபேமஸான சீரியல்களில் ஒன்றான மெட்டி ஒளியின் இரண்டாவது பாகம் விரைவில் ஒளிபரப்பாக உள்ள நிலையில் சீரியல் குழு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. 2002 முதல் 2005 வரை ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் பிறகு மீண்டும் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டது.
அப்பொழுதும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது இந்நிலையில் சில வருடங்களாகவே மெட்டி ஒலி இரண்டாவது பாகம் அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியானது. முதல் பாகத்தில் நடித்த நடிகர் நடிகைகளிடம் சீரியல் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் மேலும் புதிய பிரபலங்களையும் தேர்வு செய்ததாக கூறப்படுகிறது.
நடிகர் ஜெய் நிராகரித்த நான்கு பிளாக்பஸ்டர் திரைப்படம் எது தெரியுமா.?
மெட்டி ஒலி சீரியலை திருமுருகன் இயக்கிய நிலையில் இரண்டாவது பாகத்தை எந்த இயக்குனர் இயக்கப் போகிறார் என்பது குறித்து அப்டேட் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் தகவலின் படி மெட்டி ஒலி 2 சீரியலை விக்ரமாதித்யன் தான் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.