டிஆர்பியை ஒரேடியாக ஏற்ற மாஸ்டர் ப்ளான் போட்ட சன் டிவி நிறுவணம்..! அதுவும் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலா..?

vijay-sethupathi-01

ரசிகர்களுக்கு என்னதான் சீரியல் மீது அதிக ஆர்வம் இருந்தாலும் அதைத் தாண்டி ரியாலிட்டி ஷோக்களிலும் அதிக அளவு ஆர்வம் இருந்து வருகிறது.  அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி கூட ரசிகர்களை பெருமளவிற்கு கவர்ந்தது.

தற்போது இந்த நிகழ்ச்சிக்கு போட்டியாக சன் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி தான் மாஸ்டர் செஃப் இவ்வாறு இந்த நிகழ்ச்சி சன் டிவியில் ஒளிபரப்பாகி இதுவரை 7 எபிசோடுகள் முடிவடைந்துள்ளது. மேலும் இன் நிகழ்ச்சியானது சமையலை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட நிகழ்ச்சியாகும்.

அந்தவகையில் தலைசிறந்த சமையல் மாஸ்டர்கள் யார் யார் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சிக்கு நடுவர்களாக ஆர்த்தி சம்பத் ஹரிஷ் ராவ் கௌசிக் ஆகியோர்கள் பணியாற்றி வருகிறார்கள். மேலும் இந்நிகழ்சியானது அமெரிக்கா முதல் ஆஸ்திரேலியா வரை 40 நாடுகளில் மிகப் பிரபலமாக  நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியை தெலுங்கில் தமன்னா  தொகுத்து வழங்குவது போல தமிழில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார் இவ்வாறு மிகப் பிரபலமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் தற்போது பிரபல முன்னணி நடிகை நிக்கி கல்ராணி அவர்கள் சிறப்பு விருந்தினராக அறிமுகமாக உள்ளார்.

இதற்கு  முன்பாக நடந்த எபிசோடில் வேஸ்ட் பொருட்களை வைத்து எப்படி சமைப்பது என்பதை டாஸ்காக கொடுத்து போட்டியாளர்களை நடுவர்கள் மிரளவைத்தார்கள் இந்நிலையில் நிக்கிகல்ராணி பங்கு பெற இருப்பதை பார்த்தால் புது வகையான ஒரு டாஸ்கை அறிமுகப்படுத்தி விடுவாரோ என பலரும் அச்சத்தில் உள்ளார்கள்.

இவர் இந்த புதிய மாற்றத்தின் காரணமாக இந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் அதிகரிப்பது மட்டுமல்லாமல் சன் டிவியின் டிஆர்பி எகிரி கிடைக்கிறது.

nikki galrani
nikki galrani