25 வருடங்களாக ஏராளமான சீரியல்களை அறிமுகப்படுத்தி தமிழ் சின்னத்திரையில் சீரியலுக்கென்றே பெயர் போன ஒரு தொலைக்காட்சி தான் சன் டிவி. சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் டிஆர்பி-யில் முன்னணி வகித்து வருகிறது.
அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களையும் குடும்ப இல்லத்தரசிகள் பார்த்து வருவதால் தொடர்ந்து ஏராளமான சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். இவ்வாறு புதிதாக எதிர்நீச்சல்,கயல், சுந்தரி உள்ளிட்ட ஏராளமான சீரியல்கள் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்துள்ளது.
இவ்வாறு பெண்களின் பொழுதுபோக்குக்காக காலை 10 மணிக்கு ஆரம்பிக்கப்படும் சீரியல் இரவு வரை ஏராளமான சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள் பிறகு இடையில் 3 மணி நேரம் மட்டுமே திரைப்படம் ஒளிபரப்பாகி வருகிறது.
இப்படிப்பட்ட நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சீரியல் முடிந்து பல வருடங்கள் ஆனாலும் அதன் தாக்கம் தற்போது வரையிலும் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. இவ்வாறு ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்த சீரியல்கள்தான் தென்றல் மற்றும் கோலங்கள்.
அறிமுகமான காலகட்டத்திலிருந்து முடிகிற வரையிலும் ரசிகர்களை கவர்ந்தது அதுவும் முக்கியமாக குடும்ப இல்லத்தரசிகள் இதனை தொடர்ந்து பார்த்து வந்தார்கள். இவ்வாறு வெற்றிபெற்ற இந்த சீரியல்களை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
சன் தொலைக்காட்சியில் சீரியல்களை ஒளிபரப்ப வேண்டும் என பல நிறுவனங்கள் காத்து வருகிறது அப்படி பிரபலமான தயாரிப்பு நிறுவனம் மூலம் சன் டிவியில் ஒளிபரப்பான தொடர்களில் இந்த தொடர்களும் ஒன்று. இந்நிலையில் தற்போது இந்த இரண்டு தொடர்களும் சன் டிவியில் ஒளிபரப்பாகி செம ஹிட் அடித்த நிலையில் தற்பொழுது கலர்ஸ் தமிழில் மீண்டும் ஒளிபரப்பாக இருக்கிறது.