எதிர்நீச்சல் சீரியல இழுத்து மூடுங்க.. டிஆர்பி-யில் முன்னணி வகித்த முக்கிய சீரியல்.!

ethirneechal
ethirneechal

Ethirneechal serial: சன் டிவியில் மிகவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் முக்கியமான சீரியல் தான் எதிர்நீச்சல் தொடர்ந்து ஏராளமான எதிர்பாராத திருப்பங்கள் இருந்து வருவதனால் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. ஆனால் தற்பொழுது இந்த சீரியலையே ஓவர் டேக் செய்துள்ளது சன் டிவியின் மற்றொரு சீரியல்.

சன் டிவியின் ஏராளமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் டிஆர்பியில் முதல் ஐந்து இடங்களில் சன் டிவியின் சீரியல்கள் தான் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. அப்படி குறிப்பாக கயல், எதிர்நீச்சல், இனியா, மிஸ்டர் மனைவி, வானத்தைப்போல போன்ற சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்ப்பினை பெற்று வருகிறது.

அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியல் தான் தொடர்ந்து டிஆர்பியில் முன்னணி வகித்து வந்த நிலையில் தற்பொழுது எதிர்நீச்சல் சீரியலை பின்னுக்கு தள்ளி கயல் சீரியல் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. எதிர்நீச்சல் சீரியலில் இயக்குனர் திருச்செல்வம் ஜீவானந்தம் என்ற கேரக்டரில் என்ட்ரி கொடுத்துள்ளார்.

இதனை தொடர்ந்து ஆதி குணசேகரன் அப்பத்தாவின் 40% சொத்து போய்விட்டது என்ற வருத்தத்தில் இருந்து வருகிறார். இவ்வாறு எதிர்பாராத திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்க தொடங்கியுள்ளது எனவே வாரம் வாரம் டிஆர்பி ரேட்டிங் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

இதற்கு முன்பு கயல் சீரியல்தான் டிஆர்பியில் முன்னணி வகித்தது ஆனால் எதிர்நீச்சல் சீரியல் இந்த சீரியலை பின்னுக்கு தள்ளி முன்னுக்கு வந்தது தற்பொழுது கயல் சீரியலில் எழில் அனைவரையும் எதிர்த்து கயல் கழுத்தில் தாலியை கட்டி உள்ளார். இவ்வாறு சுவாரசியமான எபிசோடுகளுடன் ஒளிபரப்பானதால் டிஆர்பியில் 12.48 புள்ளிகளுடன் முன்னணி வகுத்துள்ளது. அப்படி முதலிடத்தை கயல் சீரியல் பிடித்திருக்கும் நிலையில் இதனை அடுத்து எதிர்நீச்சல், சுந்தரி, வானத்தைப் போல, இனியா என அடுத்தடுத்த ஐந்து இடங்களை பிடித்துள்ளது.