சமீப காலங்களாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருவதால் அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு ஏராளமான சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை அறிமுகப்படுத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் மிகவும் பிரபலமடைந்த முன்னணி தொலைக்காட்சிகளாக விஜய் டிவி மற்றும் சன் டிவி விளங்குகிறது. இந்த இரண்டு தொலைக்காட்சிகளும் நாங்கள் அடித்துக் கொண்டாலும் பரவாயில்லை மற்ற எந்தச் செனலையும் டிஆர்பி ரேட்டிங்கில் விட மாட்டோம் என்ற முடிவில் போட்டி போட்டுக் கொண்டு வருகிறார்கள்.
இந்நிலையில் சன் டிவியில் கடந்த 25 வருடங்களாக வித்தியாசமான கதை உள்ள ஏராளமான சீரியல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஹிட்டடித்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான சீரியல் அறிமுகமான தனது முதல் எபிசோடில் ஏற்றுமதியில் முன்னணி வகித்தது.
இவ்வாறு மிகவும் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீரியலில் இருந்து முக்கிய நடிகை விலக இருப்பதாகவும் அவருக்கு பதிலாக விஜய் டிவி குக் வித் கோமாளி நடிகை ஒருவர் இந்த சீரியல் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
அதாவது ஜீதமிழ் ஒளிபரப்பாகி வந்த யாரடி நீ மோகினி சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்த சைத்ரா ரெட்டி கதாநாயகியாகவும், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி சீரியலின் மூலம் பிரபலமடைந்த சஞ்சீவ் கதாநாயகனாகவும் நடித்து வரும் சீரியல்தான் கயல்.
இந்த சீரியல் தான் அறிமுகமான சில வாரங்களிலேயே டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடித்தது. மேலும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வரும் நிலையில் அனைத்து தொலைக்காட்சிகளையும் ஓவர்டேக் செய்து டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணி வகித்து வருகிறது.
இப்படிப்பட்ட நிலையில் இந்த சீரியலில் நடித்து வரும் நடிகை காயத்ரி தற்போது விலக இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் அவருக்கு பதிலாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த உமா ரியாஸ் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.