கடந்த 25 வருடங்களாக சீரியலுக்கு என்ற பெயர் போன ஒரு தொலைக்காட்சி தான் சன் டிவி. காலை 10 மணி அளவில் தொடங்கி இரவு முழுவதும் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்நிலையில் சீரியல் ஒளிபரப்புவது நம்பர் ஒன் தொலைக்காட்சியாக இருந்தவரும் சன் டிவியில் சமீபத்தில் அறிமுகமாகி அறிமுகமான முதல் வாரத்திலேயே டிஆர்பி-யில் இடத்தை பிடித்த சீரியல்தான் கயல். இந்த சீரியல் அறிமுகமான முதல் வாரத்திலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றதால் தொடர்ந்து பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த சீரியலின் கதாநாயகனாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி சீரியலின் மூலம் பிரபலமடைந்த நடிகரும், ஆலியா மானசாவின் கணவருமான சஞ்சீவ் நடித்து வருகிறார். இவரைத் தொடர்ந்து இவருக்கு ஜோடியாக ஜீதமிழ் ஒளிபரப்பாகி வந்த யாரடி நீ மோகினி சீரியல் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த சைத்ரா ரெட்டி நடித்து வருகிறார்.
இந்த சீரியல் அறிமுகமான உடனே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது இப்படிப்பட்ட நிலையில் திடீரென்று சைத்ரா ரெட்டி சீரியலில் விலகுவதாக தகவல் வெளிவந்துள்ளது. அதாவது சைத்ரா ரெட்டி சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளிவந்த வலிமை திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இவருக்கு இன்னும் சில முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்து வருவதால் இந்த சீரியலில் இருந்து விலகவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில் இதற்கு மேல் சைத்ரா ரெட்டி நடித்து வந்த கயல்விழி கேரக்டரில் நடிகர் சஞ்சுவின் மனைவி ஆலியா மானசா நடிக்க இருக்கிறார் என்ற தகவல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.