ரசிகர்களின் ஃபேவரட் டாப் சீரியலை திடீரென நிறுத்தப் போகும் சன் டிவி.! டிஆர்பி-க்கும் வைத்த ஆப்பு..

sun-tv-serial
sun-tv-serial

தமிழ் சின்னத்திரையில் ஏராளமான சீரியல்களை ஒளிபரப்பி கடந்த 25 வருடங்களுக்கு மேலாக சீரியலுக்கென்றே பெயர் போன ஒரு தொலைக்காட்சி தான் சன் டிவி. ஆரம்ப காலகட்டத்தில் இருந்து ஏராளமான புதிய சீரியல்களை அறிமுகப்படுத்தி டிஆர்பியில் முன்னணி வகித்து வந்தது. அந்த வகையில் கின்னஸ் சாதனை செய்த தொடர்கள் கூட சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்தது.

இவ்வாறு தொடர்ந்து ஏராளமான வெற்றி சீரியல்களை ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்பொழுது திடீரென டிஆர்பியில் முன்னணி வகித்து வரும் பிரபல சீரியல் ஒன்று நிறுத்த போவதாக இருக்கும் தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்பொழுது சன் டிவியில் கயல், சுந்தரி, வானத்தைப்போல, இனியா, எதிர்நீச்சல் போன்ற சீரியல்கள் பெண்களின் வாழ்க்கை முறையை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது.

மேலும் இந்த சீரியல் பலருடைய வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்த சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது டிஆர்பியில் முன்னணி வகித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ள சீரியல் தான் சுந்தரி. இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருவதால் ஏராளமான எதிர்ப்பு வருகிதாம்.

ஏன்னென்றால் இந்த சீரியலில் கதாநாயகன் முதல் மனைவியை ஏமாற்றி இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் கணவர் பற்றி தெரிந்து கொண்டும் குடும்பத்திற்காக எல்லாத்தையும் பொறுத்து சுந்தரி ஏற்றுக்கொள்கிறார். எனவே இந்த சீரியல் தவறான ஒரு கண்ணோட்டத்தை சமூகத்திற்கு கொண்டு செல்வதாக பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதனை அடுத்து இந்த சீரியலில் IAS ஆக வேண்டும் என்ற கனவுடன் இருந்து வந்த சுந்தரியின் பார்வை தற்பொழுது பறி போய்விட்டது எனவே பலரும் நெகட்டிவ் கமெண்டுகளை தந்து எதிர்ப்புகள் எழுந்துள்ளதால் இந்த சீரியல் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை வைத்து வருகிறார்களாம். எனவே சீரியல் குழுவினர்கள் இந்த சீரியலை மாற்றலாமா அல்லது கதைகளத்தை மாற்றலாமா என தொலைக்காட்சியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.