தளபதி 67 படத்தை எடுப்பதற்கு முன்பே சாட்டிலைட் உரிமையை பல கோடி கொடுத்து தட்டி தூக்கிய பிரபல தொலைக்காட்சி நிறுவனம்.! இவங்கள தவிர வேற யாரும் வாங்க முடியும்..

thalapathy-67-movie
thalapathy-67-movie

தளபதி விஜய் வம்சி இயக்கத்தில்  வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் கடந்த பொங்கல் தின சிறப்பு திரைப்படமாக கடந்த ஜனவரி 11ஆம் தேதி வெளியானது மேலும் இந்த இந்த திரைப்படத்துடன் அஜித்தின் துணிவு திரைப்படமும் மோதியது இந்த இரண்டு திரைப்படங்களும் ஒரே நேரத்தில் வெளியானதால் ரசிகர்களுக்கு இரண்டு மடங்கு கொண்டாட்டத்தை கொடுத்தது.

தளபதி விஜய் வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நடைபெற்றது அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது அதன் புகைப்படம் மற்றும் வீடியோவை சமூக வலைதளத்தில் படக் குழு வெளியிட்டது. ஆரம்பத்தில் இருந்து இந்த திரைப்படத்திலிருந்து எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகாமல் இருந்து வந்த நிலையில் தற்போது போதும் போதும் என்ற லெவலுக்கு தொடர்ந்து அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் இந்த திரைப்படத்திற்கு அனிருத் தான் இசையமைக்க இறுக்கிறார் அது மட்டும் இல்லாமல் விஜய்க்கு ஜோடியாக 15 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் திரிஷா இணைந்துள்ளார். மேலும் தளபதி 67 திரைப்படத்தில் மன்சூர் அலிகான்,  சாண்டி மாஸ்டர்,  சஞ்சய் தத்,  ஆக்ஷன் கிங் அர்ஜுன், மி ஸ்கின்,  கௌதம் மேனன்,  மாத்திவ், பிரியா ஆனந்த் ஆகியோர்கள்  நடித்து வருகிறார்கள்.

தளபதி 67 -ல் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்து வருவதால் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. அதேபோல் விஜய் நடித்து வரும் திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்குவதற்காக ஒவ்வொரு தொலைக்காட்சியும் போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறது இந்த நிலையில்அதிக விலை கொடுத்து தளபதி 67 திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியுள்ளது இதனை அதிகாரபூர்வமாக தன்னுடைய சமூக வலைதள பக்கமான ட்விட்டரில் பட குழு அறிவித்துள்ளது.

இப்படி ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு அப்டேட்டை தளபதி 67 பட குழு வெளியிட்டு வருகிறது இதனால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.