விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் தொடர்ந்து பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது அனைவருடைய எதிர்பார்ப்புக்கும் மிகப்பெரிய அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதாவது தொடர்ந்து புரியாத புதிராக எதிர்நீச்சல் சீரியலின் எபிசோடுகள் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் எப்படியாவது ஆதிரைக்கு அருணுடன் திருமணம் நடைபெற்று விடும் என அனைவரும் நினைத்து கொண்டிருந்தோம்.
ஆனால் அது நடக்காமல் போய்விட்டது என்பது மிகப் பெரிய வருத்தத்தை தந்துள்ளது. ஆனால் இதில் குணசேகரன் நினைத்தபடி ஆதிரை திருமணத்தை கரிகாலனுடன் நடுரோட்டில் வைத்து முடித்துள்ளார் இதனை பாதுகாக்க கொஞ்சம் முட்டாள்தனமாக இருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் இதனை பார்க்க மிகவும் கொடுமையானதாகவும் இப்படியும் திருமணம் நடக்குமா? இது நியாயமா? இவ்வாறு நடந்த ஒன்றை எதிர்பார்க்கவில்லை.
எனவே தொடர்ந்து பலரும் நெகட்டிவ் கமெண்ட்களை தந்து வருகிறார்கள். அந்த வகையில் படித்த மூன்று மருமகள்களும் திருமணத்தை தடுத்து நிறுத்த முடியாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு படித்து இருந்தும் யோசிக்காத முட்டாள்களாக ஓடி ஓடி திருமணம் செய்ய நினைத்த நிலையில் கடைசியில் ஆதிரையின் வாழ்க்கையை தற்போது கேள்விக்குறியாக இருக்கிறது.
இவ்வாறு இந்த தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாத ஆதிரை இதற்கு மேல் யாரையும் நம்பி பிரயோஜனம் இல்லை என துணிச்சலுடன் களத்தில் இறங்கியுள்ளார். அதாவது ஆதிரை கரிகாலனுடன் தனக்கு நடந்த திருமணத்தை நினைக்க விருப்பமே இல்லாத இந்த தாலி எனக்கு தேவையில்லை என தனது கழுத்தில் இருந்த தாலியை பிச்சி வெளியில் தூக்கி வீசுகிறார்.
தாலி தூக்கி போட்டதை பார்த்த கரிகாலன் நான் இருக்கும் பொழுதே இப்படி செஞ்சிட்டாலே என தாலியைத் தேடி செல்கிறார். பிறகு மீண்டும் அந்த தாலியை கட்ட குணசேகரன் உடனே ரிஜிஸ்டர் பண்ணி விட வேண்டும் என்று முடிவு செய்து அனைவரையும் கூட்டிக்கொண்டு போகிறார். அங்கே போன பிறகு ஆதிரை உங்களுக்கு எவ்வளவு இருக்கிறதோ அதில் பாதி எனக்கும் இருக்காதா என்ற குலசேகரனை மிஞ்சும் அளவிற்கு பேசுகிறார்.
பிடிக்காத கல்யாணத்தை ரிஜிஸ்டர் பண்ணுனா மட்டும் இப்ப என்ன ஆகப்போகுது தாலி கட்டிட்டா அவன் என் புருஷன் ஆகிடுவானா எனக்கு இந்த கல்யாணம் புடிக்கலைன்னு இப்ப சொன்னா என்ன நடக்கும் பாக்கறீங்களா என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார். இதற்கிடையில் தன்னுடைய மகளின் வாழ்க்கையை நினைத்து விசாலாட்சி வருத்தப்படுகிறார்.