தமிழ் சின்னத்திரைகள் நம்பர் ஒன் தொலைக்காட்சியாக இருந்து வரும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது பெண்கள் மத்தியில் அமோக ஆதரவுடன் வெற்றி கரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் எதிர்நீச்சல் இந்த சீரியல் டிஆர்பியில் முன்னணி வகித்து வரும் நிலையில் தொடர்ந்து பல திருப்பங்கள் நிலவி வருகிறது.
அதாவது ஆதிரை அருண் திருமணம் நடக்க வேண்டும் என ஜனனி மற்றும் மற்ற மருமகள்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராடி வருகிறார். இதற்கு சக்தி உதவி வரும் நிலையில் எப்படியாவது இவர்களை சேர்த்து விட வேண்டும் என பல முயற்சிகளை செய்து வருகின்றனர் எனவே இதன் காரணமாக தற்பொழுது அருணை யாருக்கும் தெரியாத வகையில் வத்தலகுண்டு கிராமத்தில் தங்க வைத்துள்ளார்.
அதே ஊருக்கு ஜான்சிராணி ஆதிரையை அழைத்துக் கொண்டு கோவிலுக்கு செல்கின்றனர். இவர்களுடன் நந்தினி, ஜனனி, சக்தி என செல் எப்படியாவது இதனைப் பற்றி அருணிடம் கூறி அவரை வெளியில் வரவிடாமல் செய்ய வேண்டும் என முயற்சிக்கிறார்கள் ஆனால் அருணுக்கு போன் போகவில்லை.
இப்படிப்பட்ட நிலையில் கோவிலுக்கு வந்தவுடன் கரிகாலன் பல புகைப்படங்களை எடுத்துக்கொண்டு இருக்கிறார். இந்நிலையில் தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் குணசேகரன் வீட்டில் இருக்கும் மருமகளிடம் அதிரை கரிகாலன் இருவருக்கும் நடக்க இருக்கும் திருமணத்தில் எந்த ஒரு பிரச்சனையும் வராது என சத்தியம் செய்யுங்கள் என கூறுகிறார்.
அதற்கு ரேணுகா நாங்கள் ஏன் சத்தியம் செய்ய வேண்டும் எனக் கேட்க இதனை அடுத்து கரிகாலன் எடுத்த போட்டோக்களை போனில் பார்க்கிறார். அப்பொழுது தனது நண்பரிடம் இது யாருடா என கேட்க அது நான் தான் எனக் கூற உனக்கு பின்னாடி இருப்பது அருணுடா என கூறியவுடன் அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள் தற்பொழுது அருண் அங்கி தங்கி இருப்பது ஜான்சிராணி என அனைவருக்கும் தெரிய வந்துள்ளது. இவ்வாறு தற்பொழுது என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.