அருணை பகடைக்காயாக வைத்து வியாபாரம் பேசிய கௌதம்.! திருமணத்திற்காக கோவிலில் காத்திருக்கும் ஆதிரை.. எதிர்பாராத திருப்பங்களுடன் எதிர்நீச்சல் சீரியல்

ethi-neechal
ethi-neechal

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் தொடர்ந்து பல திருப்பங்கள் இருந்து வரும் நிலையில் தற்போது அதிரையின் திருமணத்திற்கு ஒரு முடிவு வர போகிறது அதாவது குணசேகரன் தான் நினைத்தபடி எப்படியாவது ஆதிரை கரிகாலனின் திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு திரிகிறார்.

அதே போல் மறுபுறம் ஆதிரை தான் காதலித்த அருணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என நினைத்து வரும் நிலையில் இவருக்கு ஆதரவாக ஜனனி மற்றும் அந்த வீட்டில் இருக்கும் மருமகள் என அனைவரும் உறுதுணையாக இருந்து வருகிறார்கள். மேலும் எஸ்கேஆர் தன்னுடைய தம்பியை காணும் என அனைத்து பக்கங்களிலும் தேடி வருகிறார் ஆனால் அருணை காணவில்லை என்பதால் குணசேகரன் தான் அவரது தம்பியை கடத்தி வைத்துள்ளார் என சந்தேகம் இருந்து வருகிறது.

எனவே ஆதிரைக்கு நடக்க இருக்கும் திருமண மண்டபத்திற்கு குணசேகரனிடம் பிரச்சனை செய்வதற்காக வருகிறார் அரசு. குணசேகரன் அரசு இந்த கல்யாணத்தை நடக்க விடக்கூடாது என்பதற்காகத்தான் இவ்வாறு பிரச்சனை செய்து வருவதாக புரிந்துக் கொண்டு தனது தம்பிகளிடமும், ஜான்சிராணி இடமும் ரொம்பவே உஷாராக இருக்க வேண்டும் என சொல்கிறார்.

இவ்வாறு எப்படியாவது இந்த திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் என்பதற்காக அதிரை வீட்டில் இருப்பதை பார்ப்பதற்காக ஜான்சி ராணி கரிகாலனை அழைத்துக் கொண்டு செல்கிறார். மேலும் ஜனனி மற்றும் மருமகள்கள் அனைவரும் மண்டபத்திற்கு போன பிறகு கரிகாலன் உடன் ரிசப்ஷனை நடத்தி முடித்துவிட்டு மறுநாள் குலதெய்வம் கோவிலுக்கு போவது போல் சென்று ஆதிரை அருண் திருமணத்தை நடத்த பிளான் போட்டு உள்ளார்கள்.

ஆனால் அதில் மிகப்பெரிய ட்விஸ்ட் ஒன்று இருக்கிறது அதாவது ஆதிரை கோவிலுக்கு சென்ற பிறகு அருண் வருவான் என்பதுதான் சந்தேகம் ஏனென்றால் அருணுக்கு தெரியாமல் அவர் குணசேகரனின் கஸ்டடியில் போய்விடுகிறார் கௌதம் அருணை வைத்து எஸ்கேஆர் இடம் வியாபாரம் பேசுகிறார். எனவே இதனால் மிகப்பெரிய குழப்பம் ஏற்பட இருக்கிறது இவ்வாறு பல பிரச்சனைகளை தாண்டி ஆதிரை அருண் திருமணம் நடந்தால் இதனால் குணசேகரன் எந்த எல்லைக்கும் போக தயாராக இருப்பான். இவ்வாறு இதனை எல்லாம் நடத்தி வரும் ஜனனி மற்றும் அந்த வீட்டின் பெண்கள் துணிச்சலுடன் செயல்பட இருக்கின்றார்கள்.