எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் கேரக்டரையே தூக்கிய இயக்குனர்.! சீரியல் குழுவின் அதிரடி முடிவு..

ethirneechal
ethirneechal

Ethirneechal Marimuthu: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கேரக்டரில் நடித்து வந்த மாரிமுத்து சில நாட்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டு திடீரென உயிரிழந்தார் இந்த தகவல் திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

எனவே இதற்கு மேல் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கேரக்டரில் வேறு எந்த நடிகர் நடித்தாலும் மாரிமுத்துவின் இடத்தை நிரப்ப முடியாது என ரசிகர்களும் கூறி வந்தனர். ஆனால் இருந்தாலும் எதிர்நீச்சல் சீரியல் இயக்குனர் திருச்செல்வம் தொடர்ந்து ஆதி குணசேகரன் கேரக்டர் ஏற்றார் போல் நடிகர்களை தேடினார்.

அப்படி ஒரு சில நடிகர்கள் பார்ப்பதற்கு மாரிமுத்து போல இருந்தாலும் தொடர்ந்து அவர்கள் படங்களில் நடித்து வருவதனால் சீரியலில் நடிக்க முடியாத நிலை இருந்து வருகிறது. என்னவே ரசிகர்களும் இதற்கு மேல் குணசேகரனாக எந்த நடிகர் நடிப்பார் என எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்த சூழலில் தற்பொழுது எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் லெட்டர் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு கிளம்பி இருக்கும் நிலையில் லெட்டரை படித்துவிட்டு அப்பத்தா குணசேகரன் வருவான் ஆனால் இந்த குணசேகரன் கொஞ்சம் டேஞ்சரான ஆளு என கூறியுள்ளார். அப்படி தற்பொழுது வரையிலும் மாரிமுத்து நடித்த ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் யாருமே தேர்வாகவில்லையாம்.

மேலும் இந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல் எந்த நடிகரையும் மாற்ற முடியவில்லை. இதன் காரணமாக ஆதி குணசேகரன் கதாபாத்திரத்திற்கு இணையாக ஆதி பகவன் என்ற கதாபாத்திரத்தை அறிமுகம் செய்ய சீரியல் குழு முடிவு எடுத்துள்ளதாம். அதற்கான காட்சியில் தற்பொழுது தொடங்க ஆரம்பித்திருக்கும் நிலையில் விரைவில் ஆதி குணசேகரனின் அண்ணனாக இந்த ஆதிபகவன் கதாபாத்திரம் இடம்பெற இருக்கிறது.