எதிர்நீச்சல் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் கமலேஷ் குறித்து அவருடைய மனைவி சமீபத்தில் பேட்டி அளித்துள்ள நிலையில் அந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் எதிர்நீச்சல் இந்த சீரியல் அப்பா, மகள் இருவருக்கும் இடையே இருக்கும் பாச போராட்டம் மற்றும் பெண்களின் சுதந்திரம் இரண்டையும் மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது.
தற்பொழுது டிஆர்பியில் முன்னணி வகிக்கும் சீரியல்களில் ஒன்றாக எதிர்நீச்சல் விலகி வரும் நிலையில் பெண்களுக்கு எதிராக இருக்கும் பல தடங்களை அகற்றும் வகையில் வசனங்கள் இடம் பெற்று வருகிறது. எனவே இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் இந்த சீரியலில் அண்ணன் பேச்சைக் கேட்டுக் கொண்டு தம்பிகள் தங்களுடைய மனைவிகளை மிகவும் கஷ்டப்படுத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் கமலேஷ் ஞானம் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவரும் நிலையில் தன்னுடைய அண்ணன் செய்வது தவறு என்றாலும் அவர் சொல்வதை தட்டாமல் கேட்டு வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வரும் காமமேஷ் மனைவி சிந்துஜா பேட்டி ஒன்றில் பேச உள்ளார். அப்பொழுது தன்னுடைய கணவர் குறித்த தகவலையும் பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், என்னுடைய கணவருக்கும் எனக்கும் நல்ல புரிதல் இருந்தாலும் கூட சில சமயங்களில் பிரச்சனைகள் வரும் அப்படி வரும் பொழுது அது அடுத்த நிமிடமே காணாமல் போய்விடும்.
ஆனால் சீரியலில் இவர் நடிக்கும் கதாபாத்திரம் முற்றிலும் மாறுபட்டது எனவே எனக்கு எதிர்நீச்சல் சீரியல் ஞானம் கதாபாத்திரத்தை பிடிக்கவில்லை. இவனெல்லாம் ஒரு மனிதனா என்று தோன்றுகிறது ஆனால் அந்த கதாபாத்திரம் என்னுடைய கணவர் என்று நினைக்கும் பொழுது அதனை ரசிக்க தோன்றுகிறது. கமலேஷ் ஆனந்தம் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது நான் செல்லும் இடமெல்லாம் என்னை பலர் பாவம் என்று கூறுவார்கள்.
உன் கணவர் ஏற்கனவே உன்னை திருமணம் செய்து கொண்டு இன்னொரு பெண்ணை காதலித்துக் கொண்டிருப்பதாக சொல்வார்கள். இதனை கேட்பதற்கு முதலில் அதிர்ச்சியாக இருந்தது ஆனால் போகப் போக பழகிவிட்டது. இப்பொழுதெல்லாம் யாராவது என்னிடம் கமலேஷ் பற்றி கேட்கும் பொழுது எனக்கு சிரிப்புதான் வருகிறது. அவருடைய கதாபாத்திரத்தை அவர் திறன் பட நடிக்கிறார் அதேபோல எதிர்நீச்சல் ஞானம் நல்லவரா? கெட்டவரா? என்று கேள்வி பலரிடமும் எழுகிறது.
உண்மையில் கமலேஷ் மிகவும் ஜாலியான கேரக்டர் ஆனால் சட்டுனு கோபப்படுவார் இருந்தாலும் கோபம் எல்லாம் ஒரு சில நிமிடங்களில் தான் இருக்கும் அதற்குப் பிறகு அவர் சாந்தமாகிவிடுவார் இதுதான் என்னுடைய கணவரின் சிறப்பு என்று கமலேஷ் மனைவி சிந்துஜா பெட்டியில் கூறியுள்ளார். இவ்வாறு கடந்த 2007ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சிந்துஜாவை கமலேஷ் திருமணம் செய்து கொண்ட நிலையில் கிட்டத்தட்ட 12 வருடங்களாக இவர்களுக்கு குழந்தை இல்லாமல் இருந்து வந்தது. எனவே இவர்களுக்கு குழந்தை பிறக்குமா என்ற கேள்வி இருந்து வந்த நிலையில் தற்போது இந்த தம்பதியினர்களுக்கு அழகான ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது எனவே இந்த பெண் குழந்தை தான் எங்களுடைய மொத்த உலகமும் என்று இந்துஜா கூறினார்.