சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் எதிர்நீச்சல் எப்படியாவது ஆதிரைக்கு நடக்க இருக்கும் திருமணத்தை தடுத்து நிறுத்தி அப்பத்தாவின் 40% சொத்தையும் பெற்றுவிட வேண்டும் என ஜனனி முயற்சி செய்து வருகிறார்.
அதேபோல் குணசேகரன் கரிகாலனுக்கும் ஆதிரைக்கும் திருமணம் செய்து வைத்துவிட்டு அப்பத்தாவின் 40% சொத்தை ஆட்டையை போட வேண்டும் என்ற முயற்சிகள் பல திட்டங்களை செய்து வருகிறார். அப்பத்தா போட்ட கையெழுத்தை விட இன்னும் ஸ்ட்ராங்காக அவருடைய கைநாட்டு தேவைப்படுகிறது எனவே வீட்டிற்கு ஆடிட்டர் வருகிறார்.
இதனால் குணசேகரன் ஆதிரை திருமணத்திற்கு நாங்கள் எல்லாரும் மண்டபத்துக்கு போன பிறகு நீங்க வந்து அப்பத்தாவிடம் கைநாட்டு எங்கு வேண்டுமோ அங்கு வாங்கிக்கோங்க என்று சொல்கிறார். இவ்வாறு இவர்கள் போடும் திட்டத்தில் ஏதோ சூழ்ச்சி இருக்கு என தெரிந்துக் கொண்ட ஜனனி அப்பத்தாவின் ரூமில் சிசிடிவி கேமராவை யாருக்கும் தெரியாமல் வைத்து விடுகிறார் இதன் மூலம் குணசேகரன் சிக்குவது உறுதி.
இதனை அடுத்து அப்பத்தான் சொன்ன ஜீவானந்தத்தை கண்டுபிடிப்பதற்காக ஜனனி நிச்சயதார்த்தம் நடந்த மண்டபத்திற்கு சென்று அப்பத்தாவின் போனை கைப்பற்றி விட்டார். அதில் ஜீவானந்தம் என்ற பெயரில் ஏதாவது நம்பர் இருக்கிறதா என்று செக் பண்ணி பார்க்கிறார் ஆனால் அதில் எதுவும் பெயர் குறிப்பிடப்படவில்லை எனவே ஏதாவது ஷார்ட் ஃபார் இருக்கிறதா என்று கண்டுபிடித்து கடைக்கு சென்று ஒரு நபரிடம் கொடுத்து டயல் பண்ணுகிறார்.
அந்த போன் எடுத்தவுடன் கண்டிப்பாக ஜீவானந்தம் செக்கரட்ரியாக தான் இருக்கப் போகிறது எனவே இதன் மூலம் அப்பத்தா குணசேகரனுக்கு 40% சொத்தில் வைத்திருக்கும் ஆப்பு தெரிய போகிறது. இதனை அடுத்து கரிகாலன் கையை அரசு உடைத்ததை பற்றி ஜான்சி ராணி மிகவும் ஆக்ரோஷமாக வந்து குணசேகரிடம் சொல்கிறார். ஆனால் குணசேகரன் அதனை குணப்படுத்த கையை மீண்டும் நேராக உடைக்கிறார் இதனால் ஜான்சி ராணி அலற இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.