சினிமாவை பொறுத்தவரை சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் அட்ஜஸ்ட்மென்ட் என்பது பொதுவான ஒன்றாக இருந்து வருகிறது. வாய்ப்பு தேடும் ஏராளமான பிரபலங்கள் சினிமாவிற்கு அறிமுகமான உடன் இவர்களுடைய திறமைகளை பார்க்காமல் படுக்கையறைக்கு அழைப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.
இதன் காரணமாக நடிப்புத் துறை என்றாலே அட்ஜஸ்ட்மென்ட் என்பது மிகவும் முக்கியமான ஒன்று என்ற பிம்பம் இருந்து வருகிறது. அது மட்டுமல்லாமல் பிரபல நடிகைகள் பேட்டி என்று சென்று விட்டாலே உங்களுக்கு அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர் இருந்ததா என்ற கேள்வியை கேட்டு விடுகிறார்கள். அதற்கு ஏராளமான நடிகைகளும் தங்களுக்கு நடந்த அனுபவங்களை கூறிவரும் நிலையில் தற்பொழுது இந்த கேள்விக்கு பிரபல எதிர்நீச்சல் சீரியல் நடிகை வாங்குவாங்கன்னு வாங்கி உள்ளார்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் இந்த சீரியலின் மூலம் பட்டிக்தொட்டி எங்கும் பிரபலமாகியுள்ள கதாபாத்திரம் தான் ஜான்சி ராணி. இவருடைய உண்மையான பெயர் காயத்ரி கிருஷ்ணன் ஆவார் இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துக் கொண்ட பொழுது இவரிடம் அட்ஜஸ்ட்மென்ட் பற்றி கேட்கப்பட்டது அப்பொழுது அவர் வெளிப்படையாக பதிலை கூறியுள்ளார்.
அதாவது எவ எவன் கூடையோ அட்ஜஸ்ட்மென்ட் செஞ்சுக்கிட்டு போறா உங்களுக்கு என்னடா வந்தது என ஆவேசமாக கேள்வி எழுப்பி உள்ளார். அட்ஜஸ்ட்மெண்ட் செய்தால் நடிக்கிறா இல்லைனா வீட்டுக்கு போற அது அவருடைய விருப்பம். இதுல உங்களுக்கு என்னடா பிரச்சனை ஒரு நடிகையை பார்த்தாலே இந்த கேள்வி தான் உங்களுக்கு கேட்கணும்னு தோணுமா.
நீங்கள் இப்படி கேட்டுவிட்டால் உடனே அந்த நடிகையும் கண்ணீர் விட்டு தனக்கு நடந்ததை கூறணுமா? ஒரு நடிகையை இது போன்ற கேள்வியை கேட்டு விட்டு ஏன் மனதாலும், உடலாலும் சாவடிக்கிறீங்க என தைரியமாகவும், ஆரோக்கியமாகவும் தனது கருத்தை வெளிப்படுத்தி உள்ளார்.