Jawan Movie: ஷாருக்கான் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜவான் படம் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த வாரம் சென்னை சாய்ராம் கல்லூரியில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஜவான் படம் உருவாக விஜய் தான் காரணம் என்று அட்லீ பேசியது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஜவான் படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி சன் டிவியில் நேற்று ஒளிபரப்பானது ஆனால் அதில் விஜய் குறித்து அட்லீப் பேசியதே எதுவுமே இடம் பெறவில்லை என்பதால் ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர். விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் லியோ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இதற்கான ப்ரொமோஷன் பணிகளும் நடைபெற்று வருகிறது.
இந்த படத்தினை தொடர்ந்து தனது 68வது படத்தில் நடிக்க இருக்கிறார் எனவே இதற்காக அமெரிக்கா சென்று 68-வது படத்திற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையில் ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றது அப்பொழுது பேசிய அட்லீ ஜவான் உருவாக என்னோட அண்ணன் தளபதியை விஜய் தான் காரணம் என பெருமையாக கூறியிருந்தார்.
மேலும் தன்னை கம்ப்யூட்டர் சோனில் இருந்து வெளியே கொண்டு வந்ததே விஜய் அண்ணா தான் என தொடர்ந்து விஜயை புகழ்ந்து பேசினார். இவ்வாறு அட்லீ விஜய் குறித்து பேசியது ரசிகர்கள் மத்தியில் வைரலான நிலையில் ஜவான் பட இசை வெளியிட்டு விழா நிகழ்ச்சியை இன்று சன் டிவியில் ஒளிபரப்பானது.
அப்பொழுது விஜய் குறித்த அட்லீ பேசிய எதுவுமே இடம் பெறவில்லை அட்லீ விஜய் குறித்து பேசிய அனைத்தையும் எடிட் செய்து சன் டிவியில் ஒளிபரப்பாகியுள்ளது. இவ்வாறு இந்த சம்பவம் கோலிவுட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சன் டிவி பேனரில் விஜய் நடித்து வரும் சூழலில், அவரைப் பற்றிய அட்லீ பேசியதை ஏன் நீக்க வேண்டும் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
எனவே இதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில் சன் டிவி தரப்பில் இருந்து ட்வீட் போடப்பட்டுள்ளது. அதில், ஜவான் இசை வெளியீட்டு விழாவை கொண்டாடினீர்களா? என கேட்டுள்ளதோடு நிகழ்ச்சியின் தயாரிப்பு எடிட்டிங் கோகுலம் மூவிஸ் என்று குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் சன் டிவி தங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆனால் ப்ளூ சட்டை மாறன் உள்ளிட்ட சோசியல் மீடியா பிரபலங்கள் இதனை ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.