பொதுவாக சன் டிவியில் பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது அந்த வகையில் ரசிகர்களுக்கு பிடித்த ஒரு சீரியல் என்றால் அது ரோஜா சீரியல் தான் அந்தவகையில் இந்த சீரியலை பார்ப்பதற்காகவே ஒரு மாபெரும் ரசிகர் கூட்டம் உள்ளது.
இவ்வாறு இந்த சீரியலில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர்தான் நடிகர் சிபு இவர் கதாபாத்திரம் சமீபகாலமாக இந்த சீரியலில் காட்டப்படுவது கிடையாது. ஏனெனில் அவர் இந்த ஆண்டு தலை தீபாவளி கொண்டாடுவது காரணமாக படப்பிடிப்பில் இருந்து சில நாட்கள் விடுமுறை எடுத்துள்ளாராம்.
அதேபோல இந்த சீரியலில் வில்லி அணு மற்றும் கல்பனா போன்றவர்களின் கதாபாத்திரமும் சில நாட்களாக காட்டப்படவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் அதற்கான விளக்கத்தைக் கேட்டு படக்குழுவினரிடம் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
அந்த வகையில் இவர்கள் வெகுநாளாக திரையில் வராமல் இருப்பதற்கு காரணம் இவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதன் காரணமாக தான் அவர்கள் படப்பிடிப்பு தளத்திற்கு வர முடியவில்லை அதனால் தான் அவர்களுடைய காட்சிகளும் காட்டப்படவில்லை.
இவ்வாறு தொடர்ந்து நடிகைகள் மற்றும் நடிகர்கள் இவ்வாறு சிலபல காரணத்தின் காரணமாக இந்த சீரியலை விட்டு வெளியேறுவதை பார்த்தால் கடைசியில் தயாரிப்பாளர் தலையில் துண்டைப் போட்டுக்கொண்டு திரிய வேண்டும் போல. இதனால் ரசிகர்கள் விரைவில் அந்த நடிகர்கள் குணமாகி மறுபடியும் சீரியலில் நடிக்க வேண்டும் என ஆவலுடன் இருந்து வருகிறார்கள்.
அதுமட்டுமில்லாமல் இவ்வளவு நாள் பொருத்ததற்கு நன்றி கண்டிப்பாக மீண்டும் நமது குடும்பத்தில் உள்ள அனைவரும் இந்த சீரியலில் மிகச்சிறப்பாக பங்கேற்று சீரியலை விறுவிறுப்பாக கொண்டு செல்வார்கள் என இயக்குனரும் கூறியுள்ளார்.