ஒவ்வொரு தொலைக்காட்சியும் டிஆர்பியில் நல்ல ரேட்டிங் பிடிக்க வேண்டும் என்பதற்காக புதுப்புது சீரியல்களை ஒளிபரப்பி வெற்றி கண்டு வருகிறார்கள் அந்த வகையில் சமீப காலமாக படத்தின் பெயர்களிலும் படங்களைப் போலவும் சீரியல்களை இயக்கி வருகிறார்கள். அப்படியே இயக்கப்படும் சீரியல் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
அதேபோல் ஒவ்வொரு சீரியலும் ஒரு சீரியலுக்கு சலைத்தது கிடையாது. அந்த வகையில் டிஆர்பி ரேட்டிங்கில் எந்த சீரியல் முன்னிலையில் இருக்கிறது என்பது பலத்த போட்டியாக நிலவி வருகிறது. என்னதான் பல சீரியல் ஒவ்வொரு தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் விஜய் மற்றும் சன் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் இருக்கிறார்கள்.
அதுமட்டுமில்லாமல் டிஆர்பி ரேட்டிங்கிலும் அதிக ரேட்டிங் பிடித்து வருகிறது. மேலும் ஒவ்வொரு வாரமும் டிஆர்பி ரேட்டிங் ரசிகர்களால் கவனிக்கப்பட்டு வருகிறது அந்த வகையில் இந்த இரண்டு சேனல்களுக்கும் டிஆர்பி ரேட்டிங்கில் நிலவும் போட்டி மிகவும் சுவாரசியமாக இருந்து வருகிறது.
கடந்த வாரத்தில் சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங்க் நிலவரப்படி தற்பொழுது பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது அதில் விஜய் டிவி சீரியல்களை ஒரேடியாக பின்னுக்கு தள்ளி சன் டிவி சீரியல் டாப் லிஸ்டில் இடம் பிடித்துள்ளது.
இந்த நிலையில் டாப் 10 சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங் இங்க காணலாம்.
முதல் இடத்தில் சன் டிவி கயல் சீரியலும், இரண்டாவது இடத்தில் சுந்தரி, மூன்றாவது இடத்தில் பாக்கியலட்சுமி, நான்காவது இடத்தில் பாரதி கண்ணம்மா, ஐந்தாவது இடத்தில் வானத்தைப்போல, ஆறாவது இடத்தில் பாண்டியன் ஸ்டோர், ஏழாவது இடத்தில் கண்ணான கண்ணே, எட்டாவது இடத்தில் ஆனந்த ராகம், ஒன்பதாவது இடத்தில் எதிர்நீச்சல், பத்தாவது இடத்தில் ரோஜா. என சீரியல்கள் ஒவ்வொன்றும் டிஆர்பி யில் இடம் பிடித்துள்ளது.