சன் டிவி சீரியலுடன் மல்லுக்கட்டும் விஜய் டிவி.! முதல் 6 இடத்தைப் பிடித்த சீரியல்களின் லிஸ்ட் இதோ..

kayal-serial-1
kayal-serial-1

தற்பொழுது உள்ள தமிழ் சின்னத்திரைகள் அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு ஏராளமான சீரியல்கள் அறிமுகப்படுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் மேலும் வாரத்தின் இறுதியில் டிஆர்பி ரேட்டிங் தகவலம் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில் எந்த தொலைக்காட்சியின் சீரியல் அதிகப்படியாக டிஆர்பி-யில் இடம்பெறுகிறது என்பதையும் பார்த்து வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

அந்த வகையில் சன் டிவி, விஜய் டிவி இரண்டு தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு ஏராளமான சுவாரசியமான சீரியல்களை அறிமுகப்படுத்தி வரும் நிலையில் தற்போது சன் டிவியின் சீரியல்கள் அதிகப்படியாக டிஆர்பி-யில் இடம் பிடித்துள்ளது. அதாவது காதல் கதைய அம்சத்துடன் ஒளிபரப்பாகி வரும் சன் டிவியின் கயல் சீரியல் முதல் இடத்தினை பிடித்துள்ளது.

இரண்டாவது இடத்தினை அண்ணன் தங்கை பாசத்தினை அழகாக வெளிப்படுத்தி வரும் வானத்தைப்போல சீரியலும், மூன்றாவது இடத்தினை தன்னை ஏமாற்றிய கணவருக்கு பதிலடி கொடுத்து வரும் சுந்தரி சீரியலும், நான்காவது இடத்தினால் அடித்து அசதி வரும் ரோஜா சீரியல் பிடித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து தன்னுடைய அப்பாவின் பாசத்திற்காக ஏங்கிய மகள் தன்னுடைய கணவரின் மூலம் அந்த பாசத்தினை அனுபவிக்கும் மகளின் கதையான கண்ணான கண்ணே சீரியல் நான்காவது இடத்தினையும், இந்த காலத்தில் பெண் அடிமைத்தனம் இருந்தால் அதனை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை தத்ரூபமாக வெளிப்படுத்தும் எதிர்நீச்சல் சீரியல் ஐந்தாவது இடத்தினையும் பெற்றுள்ளது.

மேலும் ஆறாவது இடதுணையும் தக்கவைத்துக் கொண்ட சன் டிவி ஏழாவது இடத்தில் தான் விஜய் டிவிக்கு விட்டுக் கொடுத்திருக்கிறது அதாவது விஜய் டிவியில் தற்பொழுது பல சுவாரசியமான கதையை அம்சத்துடன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் ஏழாவது இடத்தினை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து சன் டிவியின் புதிய சீரியல் ஆனந்த ராகம் சீரியல் எட்டாவது இடத்தினையும், விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் ஒன்பதாவது இடத்தினையும், நான்கு அண்ணன் தம்பிகளின் பாச உறவினை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பத்தாவது இடத்தினையும் பெற்றுள்ளது.