வெள்ளித்திரைக்கு ரசிகர்கள் மத்தியில் எந்த அளவிற்கு வரவேற்பு கிடைத்து வருகிறது அதே போல சின்னத்திரைக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. மேலும் ரசிகர்கள் ஒவ்வொரு வாரமும் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களை தவறாமல் பார்த்து வருகின்றனர்.
அந்த வகையில் வாரம் வாரம் சீரியல் பார்க்கும் ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போகிறது இப்படிப்பட்ட நிலையில் வாரத்தின் இறுதியில் எந்த தொலைக்காட்சி ரசிகர்களால் அதிக அளவில் உள்ளது என்பதை டிஆர்பி ரேட்டிங் மூலம் தெரிந்து கொள்கிறார்கள்.
அந்தவகையில் பொதுவாக சன் டிவி மற்றும் விஜய் டிவிதான் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை வகித்து வருகிறது. இந்த இரண்டு தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டாலும் மற்ற எந்த தொலைக்காட்சியையும் டிஆர்பி இடம் பிடிக்க விடாமல் இருந்து வருகிறது.
இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது டாப் 5 இடங்களைப் பிடித்துள்ள சீரியல்களின் லிஸ்ட் வெளிவந்துள்ளது. அந்த வகையில் அனைத்து வாரமும் இரண்டு தொலைக்காட்சிகளும் டாப் 5 இடங்களை மாறி மாறி பிடித்து வரும் நிலையில் இந்த வாரம் முதல் ஐந்து இடங்களையும் சன் டிவியே பிடித்துள்ளது.
அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி சமீபத்தில் அறிமுகமாகி பிரபலமடைந்த கயல் சீரியல் டிஆர்பி-யில் முதல் இடத்தை பிடித்துள்ளது. மேலும் இந்த சீரியல் சமீபத்தில் தான் அறிமுகமாகியிருந்தாலும் மிகவும் விறுவிறுப்பான காட்சிகள் இடம்பெற்று வருவதால் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதனைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தினைப் அண்ணன் தங்கையின் பாசத்தினை உன்னத பூர்வமாக வெளிப்படுத்தும் வானத்தைப்போல சீரியலும்,மூன்றாவது இடத்தை கண்ணான கண்ணே சீரியலும், நான்காவது இடத்தை சுந்தரி சீரியலும், ஐந்தாவது இடத்தை காதல் ஆக்ஷன் சீரியல் ஆன ரோஜா சீரியல் பெற்றுள்ளது
இந்த வாரம் முதல் ஐந்து இடங்களையும் சன் டிவி சீரியல் பெற்றுள்ளது.விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்யலக்ஷ்மி, பாரதிகண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர் சீரியல் எந்த ஒரு இடத்தையும் பெறாதது விஜய் டிவி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.