Sun Picture: ரசிகர்கள் மத்தியில் நல்ல மார்க்கெட் இருக்கும் நடிகர்களை தேர்ந்தெடுத்து பல கோடி அதிகமாக சம்பளம் கொடுத்து மிகவும் பிரம்மாண்டமாக படங்களை உருவாக்கி வரும் நிறுவனம் தான் சன் பிக்சர்ஸ். தமிழ் சினிமாவிலேயே முன்னணி தயாரிப்பு நிறுவனமாக சன் பிக்சர்ஸ் விளங்கி வருகிறது.
அப்படி சமீபத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் வசூல் ரீதியாக பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. எனவே இந்த வெற்றியை தொடர்ந்து 1300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் நான்கு படங்களை பிரம்மாண்டமாக தயாரித்துக் கொண்டிருக்கிறது.
அப்படி முதலாவதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 171வது படத்திற்காக ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் இருந்து வருகின்றனர். தொடர்ந்து வருடத்திற்கு ஒரு படமாவது தந்து வரும் சூப்பர் ஸ்டார் வயதாகிக்கொண்டே போவதனால் சினிமாவில் இருந்து விலக உள்ளார். அப்படி தலைவர் 171வது படம் தான் இவருடைய கடைசி படம் என சொல்லப்படுகிறது.
இந்த படத்தினை சன் பிரக்சஸ் தயாரிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கப் போகிறார். எனவே மிகவும் பிரம்மாண்டமாக பல கோடி பட்ஜெட்டில் உருவாக இருக்கும் இந்த படம் கண்டிப்பாக சினிமா வரலாற்றில் புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து தனுஷின் 50வது படமான ராயன் படத்துணையும் சன் பிக்சர்ஸ் தான் தயாரித்து வருகிறது.
இந்த படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியான நிலையில் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இவ்வாறு ரஜினி, தனுஷ் படங்களை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்திலும், அட்லீ இயக்கத்திலும் உருவாக இருக்கும் படத்தினை சன் பிரக்சஸ் நிறுவனம் தயாரிக்க முடிவெடுத்துள்ளதாம்.
மேலும் வெற்றி மாறன்-கமல் இணைந்து தயாரிக்க இருக்கும் படத்தினை சன் பிரிக்ஸ் தான் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவ்வாறு இந்த நான்கு படங்களின் பட்ஜெட் பல கோடி இருக்கும் எனவும் பிரம்மாண்டமாக படம் வெளியாகி பல கோடி கல்லாகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.