Sun Pictures: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றிருக்கும் நிலையில் இந்த படத்தின் வெற்றி விழா சமீபத்தில் நடைபெற்றது. கடந்த 20ம் தேதி அன்று வெளியான ஜெயிலர் திரைப்படம் வெளியான முதல் நாளிலிருந்து ஒரு வாரம் நல்ல வசூலை ஈட்டியது.
ஜெயிலர் படத்தினை நெல்சன் திலீப்குமார் இயக்கிய நிலையில் கதை சுமாராக இருந்தாலும் தர்பார், அண்ணாத்த போன்ற படங்களை விட தரமாக இருந்ததால் ரசிகர்களை பெரித்தளவிலும் கவர்ந்தது. மேலும் முக்கியமாக இந்த படத்தில் வில்லனாக நடித்திருந்த விநாயகர், சிவராஜ் குமார் ஆகியோர்களின் கேரக்டர் இந்த படத்தில் சிறப்பாக அமைந்தது.
இவ்வாறு ஜெயிலர் திரைப்படம் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. அப்படி கடந்த 10 நாட்களில் மொத்தம் ரூபாய் 500 கோடியை நெருங்கி உள்ளதாக தகவல் வெளியானது. இதனை அடுத்து ரஜினி தன்னைவிட வயதில் இளையவர் காலில் விழுந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது எனவே இதனால் ஜெயிலர் படத்தின் வசூல் பாதிக்கப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தது.
இந்நிலையில் தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் இது குறித்து தனது ட்விட்டர் பதிவை வெளியிட்டுள்ளது. அதாவது, சன் பிக்சர்ஸ் இன்றைய தினம் புலியின் வேட்டையை தொடர்ந்து வருவதாகவும் ஜெயிலர் வசூல் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
படம் பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனைகளை படைத்து வருவதாகவும் தெரிவித்திருக்கும் நிலையில் மெகா பிளாக்பஸ்டர் ஆக படம் ரசிகர்களின் இருப்பிடங்களுக்கு அருகில் உள்ள திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ரஜினியின் இந்த செயலால் படத்தின் வசூல் பாதித்துள்ளதாக தகவல் வெளிவரும் நிலையில் தற்போது இது போன்ற பதிவுகளை வெளியிட்டு இருப்பது ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
The Tiger's hunt is unstoppable 💥 #Jailer is creating records at the box office 😎
Mega Blockbuster #Jailer running in theatres near you! #JailerRecordMakingBO@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @Mohanlal @NimmaShivanna @bindasbhidu @tamannaahspeaks… pic.twitter.com/u7dAkzhKyY
— Sun Pictures (@sunpictures) August 22, 2023