வதந்திகளை நம்ப வேண்டாம்.. “ஜெயிலர்” படத்தின் உண்மையான வசூலை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்

Jailer
Jailer

Jailer : சினிமா உலகில் இருக்கும் எல்லோருக்கும் ஏற்றம் இறக்கம் இருப்பது வழக்கம் அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடைசியாக நடித்த தர்பார், அண்ணாத்த போன்ற படங்கள் சரிவை தந்தன இதிலிருந்து மீண்டு வர நெல்சன் உடன் கூட்டணி அமைத்து ஜெயிலர் படத்தில் நடித்தார் படத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து மோகன்லால், சிவராஜ்குமார், விநாயகன்..

வசந்த் ரவி, யோகி பாபு, தமன்னா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள்நடித்திருந்தனர். படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி 4000 -த்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. வழக்கம்போன ரஜினி படம் போல் இல்லாமல் இது சற்று வித்தியாசமாக இருந்தது.

ஆம் முதல் பாதியில் அமைதியான ரஜினியை பார்ப்பீர்கள் இரண்டாவது பாதியில் ஆக்ரோஷத்தை காண்பித்து இருப்பார் ரஜினி.  மேலும் படத்தில் சென்டிமென்ட், காமெடியும் வேற லெவலில் ஒர்க் அவுட் ஆகியதால் ரசிகர்களையும் தாண்டி பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று தற்பொழுதும் கூட்டம் கூட்டமாக ஜெயிலர் படத்தை பார்த்து வருகின்றனர்.

அதனால் வசூலிலும் எந்த குறையும் வைக்கவே இல்லை முதல் நாளில் மட்டுமே ஜெயில் 90 கோடிக்கு மேல் வசூல் அள்ளியது அடுத்த அடுத்த நாட்களிலும் படத்தின் வசூல் குறையவே இல்லை தற்போது வரை 400 கோடிக்கு மேல் வசூல் அள்ளியதாக சொல்லப்பட்டது.

இந்த  நிலையில் தற்பொழுது ஜெயிலர் படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனமே ஓப்பனாக ஒரு ஸ்டேட்மெண்ட் வெளியிட்டு உள்ளது. இதுவரை ரஜினி ஜெயிலர் திரைப்படம் 375 கோடிகளுக்கு மேல் வசூல் அள்ளி உள்ளதாக உறுதியாக கூறியுள்ளது இதோ நீங்களே பாருங்கள்.