தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி இவர் பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு மிகப்பெரிய இடத்தை பிடித்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும் அதனை தொடர்ந்து தற்போது பல திரைப்படங்களில் கமிட் ஆகி நடித்து வரும் விஜய் சேதுபதி அவர்கள் தற்போது டிஎஸ்பி என்ற ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார்கள்.
இதனை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் நடித்து உள்ள டிஎஸ்பி திரைப்படத்திலிருந்து போஸ்டர் ஒன்று வெளியாகி உள்ளது. போஸ்டரை பார்த்து ரசிகர்கள் தற்போது அதிர்ச்சியில் உள்ளார்கள் என்று ஒரு சில தகவல் வெளியாகியுள்ளது. அதாவது டிஎஸ்பி திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது என்ற தகவல் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி இருந்தது.
ஆனால் டிஎஸ்பி போஸ்டர் வெளியான உடனே அதில் ஒரு இடத்தில் கூட சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பெயரை குறிப்பிடவில்லை அதற்கு பதிலாக கார்த்திக் சுப்புராஜ் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் வாங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதிலிருந்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியேறியுள்ளது என்பது உறுதியாகிவிட்டது ஆனால் எதற்காக வெளியேறினார்கள் என்பது தெரியவில்லை.
சேதுபதி திரைப்படத்தை தொடர்ந்து டிஎஸ்பி திரைப்படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து வரும் விஜய் சேதுபதியின் இந்த திரைப்படம் விரைவில் வெளியாகியுள்ளது இதனை தொடர்ந்து இந்த திரைப்படத்தில் போஸ்டர் மற்றும் டைட்டில் நேற்று வெளியாகிய வைரலாகி வருகிறது.
மேலும் நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் கதாநாயகனாக மட்டுமல்லாமல் வில்லனாகவும் நடிப்பார் என அனைவராலும் அறியப்பட்ட நிலையில் தற்போது கதாநாயகனாக ஒரு திரைப்படத்தில் நடித்து உள்ள நிலையில் படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் அடுத்தடுத்த திரைப்படத்தில் கமிட் ஆகியுள்ளார். விரைவில் அவர் அடுத்ததாக நடிக்க போகும் திரைப்படங்களின் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.