இளம் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து அடுத்த படத்தை இயக்கவுள்ளார் இது ரஜினிக்கு 169 திரைப்படமாகும்.
ரஜினி கடைசியாக அண்ணாத்த திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது எடுத்து 169 வது திரைப்படம் ஒரு பிரமாண்ட வெற்றிப் படமாக இருக்க வேண்டும் என்பதற்காக நெல்சன்னிடம் தஞ்சம் புகுந்துள்ளார். இளம் இயக்குனர்கள் பிரமாண்ட நடிகரை வைத்து படம் இயக்கும் போது சற்று பயப்படுவது வழக்கம்.
இளம் இயக்குனர் நெல்சன் அதை பீஸ்ட் படத்திலேயே காட்டிவிட்டார். முதன்முறையாக ரஜினியுடன் நெல்சன் இணைவதால் படம் எப்படிப்பட்ட படமாக உருவாகும் என்பது ரசிகர்கள் கணிக்க முடியாத அளவில் இருக்கிறது. ஒரு பக்கம் இது இப்படி இருக்க மறுபக்கம் தலைவரின் 169 திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்க இருந்தது.
முதலில் இந்த படத்தின் பட்ஜெட் சுமார் 225 கோடி ஒதுக்கி இருந்தது. திடீரென சன் பிக்சர்ஸ் நிறுவனமும் குறைக்க ஆரம்பித்துவிட்டது ரஜினி நெல்சன் இணையும் இந்தப் படத்தின் பட்ஜெட் 150 கோடி தானம் அதற்குள்ளே இந்த படத்தை எடுத்து முடிக்க வேண்டும் என தயாரிப்பு நிறுவனம் கூறிவிட்டது.
இதனால் வேறு வழியில்லாமல் நெல்சன் இந்த பட்ஜெட்டில் படம் எடுக்க தற்பொழுது என்ன செய்வதென்று தெரியாமல் முழி பிதுங்கிப் போய் இருக்கிறாராம் ரஜினியின் 169-வது திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் ஷூட்டிங் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன.