தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் ஏப்ரல் மாதம் ஒன்பதாம் தேதி திரைக்கு வர வேண்டியது ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிக்போய்கொண்டே போகிறது இந்த திரைப்படத்தில் விஜய், விஜய்சேதுபதி மாளவிகா மோகனன் ஆண்ட்ரியா, கௌரி கிஷன் சாந்தனு பாக்கியராஜ் என பல பிரபலங்கள் நடித்துள்ளார்கள்.
இந்நிலையில் தளபதி விஜய் மாஸ்டர் திரைபடத்தை தொடர்ந்து அடுத்ததாக ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தளபதி 65வது திரைப்படத்தில் நடிக்கப் போவதாக தகவல் வெளியானது, இவர்கள் கூட்டணியில் உருவாகும் நான்காவது திரைப்படம் ஆகும் அதனால் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
மேலும் தளபதி 65 திரைப்படத்தை முன்னணி நிறுவனமான சன் பிக்சர் நிறுவனம் தான் தயாரிக்கப் போவதாகவும் கூறி வந்தார்கள். இந்த நிலையில் கொரோனா ஊடகங்கள் சினிமாத் துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது அதனால் தயாரிப்பாளர்கள் கூட்டத்தில் முன்னணி நடிகர்களின் சம்பளத்தை பாதியாக குறைக்க வேண்டும் என கலந்து பேசி முடிவு எடுத்தார்கள்.
அதனால் விஜயின் சம்பளத்தை குறைத்துக் கொள்ள சன் நிறுவனம் விஜயிடம் கேட்டுள்ளது ஆனால் முடியாது என கூறி விட்டதால் இந்த திரைப்படத்தில் இருந்து சன் பிக்சர் விலகி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளன, ஆனால் இது குறித்து இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
இப்படி இருக்கும் நிலையில் விஜய்யின் திரைப்படத்தை கைவிட்டுவிட்டு சன் நிறுவனம் சூர்யாவின் திரைப்படத்தை தயாரிக்க போவதாக தகவல் லீக் ஆகியுள்ளது. மேலும் சூர்யாவின் இந்த திரைப்படத்தை பாண்டிராஜ் தான் இயக்கப் போகிறாராம், ஏற்கனவே சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்திலும் ஹரி இயக்கத்தில் அருவா படத்திலும் நடிக்க இருக்கிறார்.
இந்த இரண்டு திரைப்படமும் கிராமத்து கதை என்பதால் மீண்டும் பாண்டிராஜ் இயக்கத்தில் கிராமத்து கதையில் தான் சூர்யா நடிக்கப் போவதாகவும் கூறப்படுகிறது இதன் முக்கிய அறிவிப்பு கொரோனா ஊரடங்கு முடிந்தவுடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.