தளபதி விஜய் நெல்சன் திலிப்குமர் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தை படக்குழு ஏப்ரல் 13ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. ஆனால் இன்றுவரை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பீஸ்ட் திரைப் படத்திற்கான பிரமோஷன் வேலையை தொடங்காமல் இருக்கிறது.
இந்த நிலையில் பீஸ்ட் திரைப்படத்தை இயக்கியுள்ளார் நெல்சன் திலிப்குமர் சமீபத்தில் நாளை என்று குறிப்பிட்டு ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தினார். ரசிகர்களும் டீசர் அல்லது டிரெய்லர் தான் நாளை வெளியாக போகிறது என ஆர்வமாக இருந்தார்கள் ஆனால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இதுவரை எந்த ஒரு பதிவையையும் வெளியிடாமல் மவுனம் காத்து வருகிறது.
இந்தநிலையில் டிரைலர் ரிலீஸ் தேதியை நேற்று அறிவித்து இருந்தார்கள். சன் பிக்சர் மற்றும் விஜய்க்கு இடையே என்னதான் மோதல் என பலரும் கேள்வி எழுப்பி வந்தார்கள். இந்த நிலையில் சினிமா வட்டாரத்தில் இருந்து ஒரு தகவல் தீயாய் பரவி வருகிறது.
இந்த நிலையில் பீஸ்ட் திரைப்படத்தின் கடைசி அவுட் புட்டை பார்த்துவிட்டு சன் பிக்சர்ஸுக்கு திருப்தி இல்லை எனவும் அதனால் பீஸ்ட் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்குப் பிறகு ரிலீஸ் செய்து கொள்ளலாம் என விஜயிடம் கேட்ட பொழுது விஜய் தேதியை மாற்ற வேண்டாம் என ஸ்ட்ரிக்டாக கூறிவிட்டாராம்.
இதனால் கடும் அதிருப்தியில் இருக்கிறது சன் பிக்சர் நிறுவனம் ஏற்கனவே அண்ணாத்த, எதற்கும் துணிந்தவன் ஆகிய திரைப்படங்கள் சரியாக போகாததால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பீஸ்ட் திரைப்படத்தின் வசூலில் எந்த ஒரு பாதிப்பும் வரக்கூடாது என நினைத்து கே ஜி எஃப் 2 திரைப்படத்துடன் மோத வேண்டாம் என முடிவெடுத்தது ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் கொஞ்சம் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிர்ச்சியில் இருக்கிறது.
அதனால்தான் பிரமோஷன் வேலைகளை செய்யாமல் மௌனம் காத்து வருகிறார்கள்.