முன்பெல்லாம் நாம் அனைவரும் ஒரு பாடல் கேட்க வேண்டும் என்றால் அதனை எஃப்எம் மூலமாகத்தான் கேட்போம். இதனைத் தொடர்ந்து பிரபல தனியார் தொலைக்காட்சிகளில் ரசிகர்களுக்கு பிடித்த பாடல் என தொலைபேசி மூலமாக ரசிகர்கள் தொகுபளினிகளிடம் பேசி தனக்கு பிடித்த பாடல்களை கேட்டு ரசிப்பார்கள்.
அந்த வகையில் பிரபல தனியார் தொலைக்காட்சி ஆனா சன் நெட்வொர்க்கின் சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றியவர் தான் அனுஷா இவர் ஒரு காலகட்டத்தில் மிகவும் ரசிகர் மத்தியில் பிரபலமானது மட்டுமில்லாமல் இவர்களுடைய குரல் ரசிகர்கள் மனதில் இன்றும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
இவ்வாறு பிரபலமான நமது தொகுப்பாளினியின் உண்மையான பெயர் என்னவென்றால் பூர்ணிமா ஆனால் மாடனாக இருக்கவேண்டும் என்ற காரணத்தினால் தன்னுடைய பெயரை அனுஷா என மாற்றிக் கொண்டார். அந்த வகையில் இவர் ஹைதராபாத்தை பூர்வீகமாக கொண்டவர் ஆனால் தன்னுடைய படிப்பு வளர்ப்பு அனைத்துமே சென்னையில் தான்.
மேலும் இவர் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் பயோடெக்னாலஜி படிப்பு முடித்தவர் அதனை தொடர்ந்து ரேடியோ சேனலில் ஜாக்கியாக பேசுவதற்கான வாய்ப்பு கிடைத்தது இதனை தொடர்ந்து அவருக்கு கல்லூரி ரசிகர்கள் ஏராளமாக உருவாகி விட்டார்கள்.
இவ்வாறு பிரபலமான தொகுப்பாளினி சில வருடங்களுக்கு முன்பாக சக்தி முருகன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவ்வாறு திருமணத்திற்கு பிறகு ஒரு மகனைப் பெற்றெடுத்த நமது தொகுப்பாளினி சமீபத்தில் ஒரு பெண்ணையும் பெற்றுள்ளார்.
இந்நிலையில் நமது தொகுப்பாளினி சமீபத்தில்தான் தன்னுடைய திருமணம் முடிந்த பிறகு சமீபத்தில் சீரியலிலும் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.