தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருபவர் தனுஷ். தற்போது இவர் நடிப்பில் கர்ணன் திரைப்படம் வெளியாகி உலகம் முழுவதும் மாபெரும் வெற்றி நடை போட்டு வருகிறது. தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப் படத்திற்கு அடுத்ததாக கர்ணன் திரைப்படம் தான் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
கர்ணன் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று வந்தாலும் வசூல் ரீதியாக சாதனை படைத்து வருகிறது. கர்ணன் திரைப்படத்தை தொடர்ந்து கார்த்திக் நடித்திருந்த சுல்தான் திரைப்படமும் திரையரங்குகளில் ஓடி கொண்டிருக்கிறது.
இந்த இரண்டு திரைப்படங்களிலும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் படம் என்பதால் எந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பதை நாம் அனைவரும் முக்கியமாக பார்ப்போம்.
அந்த வகையில் இந்த இரண்டு திரைப்படங்களும் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்நிலையில் கார்த்திக் நடித்திருந்த சுல்தான் திரைப்படம் தமிழகம் முழுவதும் சுமார் 25 கோடி வசூல் செய்துள்ளதாம். இதனைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளிவந்துள்ள கர்ணன் திரைப்படம் தமிழ் முழுவதும் முதல் நாளில் 11 கோடியும்,இரண்டாவது நாளில் 9 கோடியும்,மூன்றாவது நாளில் 13 கோடியும் வசூல் சாதனை பெற்றுள்ளது.
அந்தவகையில் கர்ணன் திரைப்படம் ரிலீசாகி வெறும் மூன்றே நாட்களில் 30-க்கு கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. திரையரங்குகளில் வெறும் 50 சதவீதம் பார்வையாளர்கள் தான் அனுமதிக்கப்படுகிறார்கள் அதுக்கே 30 கோடி வசூல் செய்துள்ளது என்றால் 100% பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டால் சொல்லத் தேவையில்லை.