கைதி படம் போல லாபத்தை குவிக்கும் சுல்தான் படம்!! வெளிவருவதற்கு முன்பாகவே பல கோடியை அள்ளி உள்ளதாம்.! முழு விவரம் இதோ.

அரசியல் கட்சிகள் எப்படி சண்டை போட்டுக்கொண்டு பின்னாட்களில் இணைந்து கட்சி வேலைகளை செய்கிறதோ அது போலத்தான் சினிமாவிலும் முதலில் சூர்யா மற்றும் ஜோதிகா ஆகியோர் படங்களை திரையிட மாட்டோம் என கூறி திரையரங்கு உரிமையாளர்கள் தற்போது கார்த்தியின் சுல்தான் திரைப்படத்தை வாங்க தற்போது போட்டி போட்டுக்கொண்டு நிற்கின்றனர்.

கொரோனா தொற்று காரணமாக திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில் மாஸ்டர் திரைப்படம் தான் முதன்முதலில் திரையரங்கு ஓபன் செய்யப்பட்ட பொழுது வெளிவந்து மாபெரும் ஹிட்டடித்தது.

அதைத்தொடர்ந்து சுல்தான் படத்தில் எதிர்பார்ப்பு  எகிறி உள்ளது. இதனால்  தியேட்டர் உரிமையாளர்களையும் வாங்க போட்டு போடுகின்றனர்.

மேலும் கார்த்தியின் சுல்தான் படத்தையும் தாண்டி ஜோதிகா, கார்த்தி மற்றும் புதுமுக நடிகர்களின் படங்களை  வாங்க காத்திருக்கின்றனர்.

சுல்தான் திரைப்படத்தை ரெமோ  படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இந்த திரைப்படத்தை 40 கோடி பட்ஜெட் செலவில் எடுத்து உள்ளார்.

திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பாகவே கிட்டத்தட்ட 67 கோடி ரூபாய்க்கு விற்று உள்ளதாக கூறப்படுகிறது.

படத்தின் டீசர் மிகப்பெரிய அளவில் வைரல் ஆன நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பும் தற்போது எகிறி  உள்ளது.

இப்படம் கைதி படத்தை போல மாபெரும் ஹிட் அடிக்கும் என கூறுகின்றனர்.