பாக்கத்தான் காமெடி பீஸ்.. நிஜத்தில் வேற மாதிரியான ஆள்.. கவுண்டமணி பற்றிய ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை சுகன்யா

suganya
suganya

90 கால கட்டங்களில் கொடி கட்டி பறந்த நடிகை சுகன்யா இவர்   சரத்குமார், சத்யராஜ் போன்ற பல டாப் நடிகர்களின் படங்களில் நடித்து பெயரையும் புகழையும் சம்பாதித்தவர். என்னதான் திரை உலகில் வெற்றியை கண்டாலும் வயது முதிர்வின் காரணமாக அவர்களுக்கு பட வாய்ப்பு குறைவது வழக்கம் அது போல நடிகை சுகன்யாவுக்கும் பட வாய்ப்புகள் குறையத் தொடங்கின.

இதனால் தற்போது தமிழ் சினிமாவில் பெரிதும் தென்படாமல் இருக்கிறார் இப்படி இருந்தாலும் அவ்வபோது சினிமா பற்றியும் மற்றும் தன்னுடன் நடித்த நடிகர், நடிகைகள் பற்றி அவ்வபோது ஊடகங்களுக்கு சொல்வது உண்டு. அப்படி சமீபத்திய பேட்டி ஒன்றில் காமெடி நடிகர் கவுண்டமணி பற்றி நடிகை சுகன்யா பேசியது பெரும் வைரலாகி வருகிறது.

அவர் சொன்னது.. நீங்கள் திரையில் பார்க்கும் கவுண்டமணி  வேறு. நிஜத்தில் சினிமாவைப் பற்றி அவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறார். அவர் குறிப்பாக ஹாலிவுட் படங்களை பற்றி வியந்து பேசுவார். சில படங்களின் பெயர்களை சொல்லி இந்த படத்தை பாருங்கள்.. அதுல ஹீரோ எவ்வளவு சூப்பரா நடிச்சிருக்கான்னு பாரும்மா..

என தன்னிடமும் கவுண்டமணி சொன்னதாக கூறினார் இவரை போலவே நடிகர் சத்தியராஜ் கவுண்டமணி குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் சொல்லியிருந்தார்.. அதில் தமிழ் படங்களில் நடிப்பதோடு சரி அவர் தமிழ் படங்களை அதிகமாக பார்க்க மாட்டார் ஹாலிவுட் படங்களை தான் விரும்பிப் பார்ப்பார் என அவர் கூறினார்.

விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் நீங்கள் சொல்வது உண்மைதான் ஏனென்றால் கவுண்டமணி அப்பொழுதே பல ஹாலிவுட் படங்களை பற்றியும் பல ஹாலிவுட் நடிகர்களை பற்றியும் தனது காமெடியில் பேசி இருப்பார் எனக்கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.  இந்த தகவல் சோசியல் மீடியா பக்கத்தில் தற்போது காட்டு தீ போல பரவி வருகிறது