suji leeks sujithra husband latest image:பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் மிக பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி ரசிகர் மத்தியில் இடம் பிடித்த ஒரு நிகழ்ச்சிதான் பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பல பிரபலங்கள் இன்று தமிழ் சினிமாவில் கால்தடம் பதித்துள்ளார்கள்.
இந்நிலையில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை நான்கு சீசன்கள் முடிந்துள்ளது சமீபத்தில் நடந்த நான்காவது சீசனில் ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி என பல பிரபலங்கள் கலந்து உள்ளார்கள் இதில் முதலிடத்தை ஆரி பிடித்துள்ளார் மேலும் இரண்டாம் இடத்தை பாலாஜி பிடித்திருந்தார்.
இந்த நிகழ்ச்சியில் இவர்களை தொடர்ந்து அர்ச்சனாவும் கலந்து இருந்தார் பின்னர் அர்ச்சனாவை தொடர்ந்து வைல்ட் கார்டு போட்டியாளராக பிக்பாஸில் நுழைந்தவர் தான் சுசித்ரா. இவர் சுசிலீக்ஸ் மூலமாக இணையத்தில் மிகவும் பேமஸ் ஆகிவிட்டார்.
இவர் ஒரு பாடகி என்பது நம் அனைவருக்குமே தெரியும். இவ்வாறு இவருடைய அழகான குரலின் மூலமாக பல பாடல்களில் பின்னணி பாடகியாக பாடியுள்ளார். அதுமட்டுமில்லாமல் சுசிலீக்ஸ் என்ற பெயரில் தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகர்கள் நடிகைகள் ஆகியோர்களின் மோசமான புகைப்படத்தை இணையத்தில் வெளியேற்றி சர்ச்சையை கிளப்பி விட்டார்.
ஆனால் இவ்வாறு வெளிவந்த புகை படத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது ஏனெனில் என்னுடைய அக்கவுண்டை யாரோ ஹேக் செய்து விட்டார்கள் ஆகையால் இவ்வாறு வெளிவந்த புகைப்படத்திற்கு நான் காரணம் கிடையாது என்று கூறிவிட்டார்.
பாடகி சுசித்ரா பிரபல நடிகர் கார்த்தி குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவ்வாறு அவர் சுசிலீக்ஸ் சர்ச்சையில் சிக்கிய போது கூட கார்த்திக் அவருக்கு ஆறுதலாக இருந்தது மட்டுமல்லாமல் அவருக்கு சாதகமாக பல பதிவுகளையும் வெளியிட்டு இருந்தார்.
இவ்வாறு பிரபலமான நடிகர் கார்த்திக் மாதவன் நடிப்பில் வெளியான அலைபாயுதே என்ற திரைப்படத்தின் மூலம் தான் சினிமாவில் முதன்முதலாக கால்தடம் பதித்தார் அதன்பிறகு பல திரைப்படங்களில் இவர் நடித்திருந்தாலும் இவர் துணை கதாபாத்திரத்தை தாண்டி வளர முடியவில்லை.
மேலும் சுசிலீக்ஸ் சர்ச்சையின் பிறகு சில மாதங்கள் ஆனதுமே கார்த்திக் மற்றும் சுஜித்ரா ஆகிய இருவருமே விவாகரத்து பெற்றுக் கொண்டார்கள். இந்நிலையில் கார்த்திக் தல அஜித் போல சால்ட் அன்ட் பெப்பர் ஸ்டைலில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இவ்வாறு அவர் வெளியிட்ட புகைப்படம் ஆனது சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.