தெலுங்கு சினிமாவில் நடிகர் வெங்கடேஷ் மற்றும் மீனா நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக தயாராகி இணையத்தில் வெளியான திரைப்படம் தான் திருஷ்யம் 2. இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிகை சுஜா வருணி நடித்துள்ளார்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை வெகு நாட்களுக்கு பிறகு திரைப்படத்தில் நடித்து இருந்தாலும் தன்னுடைய சிறந்த நடிப்பின் மூலமாக ஏகப்பட்ட ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தது மட்டும் இல்லாமல் பல்வேறு பாராட்டுக்களையும் புகழையும் இந்த திரைப்படத்தின் மூலம் தேடிக்கொண்டார்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் கலந்துகொண்டு தன்னுடைய துணிச்சலான குணத்தின் மூலமாக ஏகப்பட்ட ரசிகர்களின் ஆதரவுகளை பெற்றார் அந்த வகையில் எப்படியாவது திரை உலகில் முன்னணி நடிகையாக வருவார் என்று பலரும் நினைத்தார்கள்.
ஆனால் இவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி அதன்பிறகு திரைப்படத்தில் கவனம் செலுத்தாமல் அவர் காதலில் கவனம் செலுத்தியதாக கூறப்பட்டது அந்த வகையில் சிவாஜி கணேசனின் பேரன் சிவகுமார் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாகவும் கோரியிருந்தார்.
பின்னர் திருமணத்துக்கு பிறகு குழந்தைக்கு தாயான நமது நடிகை சிறிது காலம் சினிமாவை விட்டு விலகி இருந்தார். இந்நிலையில் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வரும் சுஜா வருணி தெலுங்கு திரிஷ்யம் 2 என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவர் இனிமேல் சினிமாவில் அழுத்தமான வேடங்களில் மட்டுமே நடிப்பேன் என இருக்கிறாராம். அந்தவகையில் தமிழில் இவருக்கு நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தாலும் நடிப்பதற்கு தயார் என கூறியுள்ளாராம்.