அந்தக் காலத்திலேயே நடிகர் சுதாகர் இந்த நடிகையைதான் துரத்தித் துரத்தி காதலித்தாரா.! அட இவரா என உச்சுகொட்டும் ரசிகர்கள்.!

sudhakar

தென்னிந்திய சினிமாவில் நடிகராக வலம் வந்தவர் நடிகர் சுதாகர் இவர் தமிழ் தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் இதுவரை கிட்டத்தட்ட 600 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒரு காலகட்டத்தில் சுதாகர் திரைப்படம் என்றாலே அப்பொழுது உள்ள இளசுகள் மத்தியில் மிகவும் பிரபலம் அந்த அளவு சுதாகர் திரைப்படத்தை விரும்பிப் பார்ப்பார்கள் மக்கள்.

சுதாகர் நடிப்பது மட்டுமல்லாமல் தெலுங்கிலும் படங்களை தயாரித்தார். தமிழழகன் சுதாகர் ஆந்திராவில் குண்டூரில் உள்ள கிறிஸ்டியன் கல்லூரியில் இளநிலை வரை படித்தவர். அதன் பிறகுதான் திரைப்பட நிறுவனத்தில் சேர்ந்து திரைப்படங்களில் நடிப்பதற்கும் திரைப்படங்களை தயாரிப்பதிலும் களமிறங்கினார்.

மேலும் சுதாகர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக பாரதிராஜா அவர்களுடன் இணைந்து 1977ஆம் ஆண்டு நடிக்க ஆரம்பித்தார் அதன் பிறகு வரிசையாக பல திரைப்படங்களில் நடித்தார். ஒரு காலகட்டத்தில் தொடர்ச்சியாக பல ஹிட் திரைப்படங்களை   கொடுத்தார்  அதுமட்டுமில்லாமல் இவர் நடிப்பில் வெளியாகிய 16 வயதினிலே திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

அதனைத் தொடர்ந்து கிழக்கே போகும் ரயில் படத்தில் இளைஞனாக அறிமுகமானார்.இந்த படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ராதிகா. ராதிகாவுக்கு இந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றி திரைப்படமாக அமைந்தது.  அதுமட்டுமில்லாமல் சுதாகர் மற்றும் ராதிகா இருவரும் இணைந்து பல திரைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் இருவரும் காதலர்கள் என்று கூறும் அளவிற்கு பிரபலமாக பேசப்பட்டார்கள்.

இவர்கள் இருவரையும் பற்றி பல காதல் வதந்திகள் சுற்றித் திரிந்தது. ராதிகா மட்டுமல்லாமல் அடுத்தடுத்து நடித்த பல நடிகைகளிடம் காதல் கிசுகிசு பிரபலமாக பேசப்பட்டது. ஒரு காலகட்டத்தில் சுதாகர் தங்கியிருக்கும் ஹோட்டலில் பெண்கள் நிரம்பி வழிந்தார்கள். அதுமட்டுமில்லாமல் குடிப்பழக்கம் அதிகமானது.

மேலும் நிறம் மாறாத பூக்கள் மாபெரும் வெற்றி அடைந்ததை அடுத்து சுதாகர் கவனம் சிதற தொடங்கியது அது மட்டுமில்லாமல் படப்பிடிப்பில் மது போதையில் தான் கலந்து கொண்டார் என தகவல் காட்டுத்தீ போல் பரவியது. சுதாகர் ஒரு காலகட்டத்தில் கமலுக்கு இணையான ரசிகர் கூட்டத்தை பெற்றிருந்தார்.

அதன் பிறகு போகப் போக அவருக்கு படவாய்ப்புகள் குறைந்தது படங்களும் தோல்வியை சந்தித்தது பட வாய்ப்பு சரியாக பயன்படுத்திக் கொள்ளாததால் இவர் தோல்வியை சந்தித்தார். சுதாகர் நடிகை ஸ்ரீப்ரியா அவர்களை துரத்தி துரத்தி காதலித்ததாக மிகப் பெரிய செய்தி வைரலானது அதுமட்டுமில்லாமல் இவர்கள் இருவரும் இணைந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அதன் பிறகு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது இதனை பிரபல யூடியூப் சேனலில் பயில்வன் ரங்கனதன் அவர்கள் கூறினார்கள்.

sri-priya
sri-priya