ரத்தன் டாட்டாவின் வாழ்க்கையை படமாக எடுக்கும் இயக்குனர் சுதா கொங்கரா – ஹீரோ யார் தெரியுமா.?

tata-
tata-

தமிழ் சினிமாவில் ஆண் இயக்குனர்கள் தான் அதிகம் பெண் இயக்குனர்கள் மிக குறைவு.. தற்போது கூட பல இளம் ஆண் இயக்குனர்கள் சிறப்பான படங்களை குறித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளன. அவர்களுக்கு போட்டியாக இயக்குனர் சுதா கொங்கரா  நல்ல படங்களை கொடுத்து வருகிறார்.

முதலில் இறுதிச்சுற்று படத்தின் மூலம் அறிமுகமாகினார் இந்த படத்தில் மாதவன் மற்றும் ரித்திகா சிங் ஹீரோ ஹீரோயினாக நடித்திருந்தனர் படம் குத்துச்சண்டையை மையமாக வைத்து உருவாகி இருந்தது முதல் படமே அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது அதை தொடர்ந்து சூர்யாவை வைத்து சூரரை போற்று என்னும் திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

இந்த படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இயக்குனர் சுதா கொங்கராவிற்கு ஒரு அங்கீகாரத்தை கொடுத்தது மற்றும் சூரரைப் போற்று திரைப்படம் பல விருதுகளையும் வாங்கியது. இவரது படங்கள் ஒவ்வொன்றும் மற்ற படங்களை காட்டிலும் சற்று வித்தியாசமாக இருக்கும் மக்களுக்கு தேவையான படமாக இருக்கும்.

இந்த இரு படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் சுதா கொங்கரா அடுத்தடுத்து பல டாப் நடிகர்களுக்கும் கதை கூறியிருக்கிறார். தற்போது சூரரை போற்று திரைப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்து வருகிறார் இந்த படம் ஜி ஆர் கோபிநாத் என்பவரின் வாழ்க்கை வரலாற்றை வைத்து உருவாகி வருகிறது இப்படி இருக்கின்ற நிலையில் இயக்குனர் சுதா கொங்கரா..

அடுத்ததாக ரத்தன் டாடாவின் வாழ்க்கையை படமாக எடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் அதற்கான வேலைகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. இந்த படத்தில் சூர்யா அல்லது அபிஷேக் பச்சன் தான் ரத்தன் டாடா ரோலில் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிய வருகிறது. இந்த படத்தினை அடுத்த ஆண்டு சுதா கொங்காரா துவங்க இருப்பதாக கூறப்படுகிறது.