அஜித்திற்கு காத்திருந்தா அவ்வளவுதான் வேறு நடிகரை கமிட் செய்த சுதா கொங்கரா.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் அஜித். பொதுவாக இவர் எந்த திரைப்படத்தில் நடித்து வந்தாலும் இவரின் திரைப்படத்திற்காக ரசிகர்கள் எப்பொழுதும் காத்து வருவது வழக்கம்.

அந்த வகையில் ஒரு வருடத்திற்கு முன்பு நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. அதுமட்டுமல்லாமல் சமூகத்திற்கு தேவையான பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டதால் இத்திரைப்படம் அனைவராலும் பாராட்டப்பட்டது.

இதனை தொடர்ந்து ஒரு ஆண்டிற்கும் மேலாக வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆனால் இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட இன்னும் வெளிவரவில்லை ஆனால் 90 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டதாகவும் விரைவில் ரிலீசாகும் என்றும் கூறியுள்ளார்கள். அந்த வகையில் இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து காட்சிகளையும் எடுத்து முடித்து விட்டதாகவும் ஒரே ஒரு சண்டைகாட்சி மட்டும் வெளிநாட்டில் எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்கள்.

ஆனால் தற்பொழுது கொரோனாவின் இரண்டாம் அலை வேகம் அதிகளவில் பரவி வருவதால் கொஞ்சம் தாமதமாகும் என்று கூறப்படுகிறது.  இத்திரைப்படத்தை எச் வினோத் இயக்க போனி கபூர் தயாரித்து வருகிறார்.  இதனை தொடர்ந்து தல 61ஆவது திரைப்படத்தையும் எச் வினோத்து தான் இயக்க உள்ளார்.

வினோத் இதற்கு முன்பு தல அஜித்துடன் ஒரு கதை கூறியதாகவும் அந்தக் கதை அஜித்திற்கு பிடித்துப் போக மூன்றாவது முறையாக வினோத்துடன் கைகோர்க்கிறார். இந்நிலையில் சுதா கோங்குரா சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த சூரரைப்போற்று திரைப்படத்தை இயக்கி இருந்தார்.இதனைத் தொடர்ந்து தல அஜித்தின் அடுத்த திரைப்படத்தை இவர்தான் இயக்க உள்ளதாக தகவல் வெளிவந்தது.

ஆனால் தற்பொழுது சுதா கொங்கரா இயக்கத்தில் வேறு ஒரு முன்னணி நடிகர் நடிக்க உள்ளாராம்.  அந்த வகையில் தமிழில் பாகுபலி திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்த பிரபாஸை வைத்து தனது திரைப்படத்தை இயக்க உள்ளாராம்.