சினிமா உலகம் முன்னேற முன்னேற தொழில் நுட்பங்கள் புதிதாக வருவதால் படங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமாகவும், எச்டி தரத்திலும் இயக்குனர்கள் கொடுத்து அசத்தி வருகின்றனர் இதனால் அந்த சினிமா பிரபலமடைந்து வருகிறது இப்பொழுது ஹாலிவுட் படங்களுக்கு இணையாக தமிழ் சினிமா, தெலுங்கு, ஹிந்தி ஆகியவை முன்னேறிய நிலையில் கன்னட சினிமாவை மட்டும் அதலபாதாளத்தில் கிடந்தது.
கன்னட சினிமாவில் இருந்து வெளிவந்த படங்கள் பெரிய அளவில் ரீச் ஆகவில்லை. ஒரே ஒரு படத்தின் மூலம் உலக அளவில் கன்னட சினிமாவை பேச வைத்தவர் தான் இயக்குனர் பிரசாந்த் நீல். நடிகர் யாஷ் உடன் கூட்டணி அமைத்து.
KGF என்ற பிரம்மாண்ட திரைப்படத்தை எடுத்திருந்தார் இந்த திரைப்படம் கன்னட சினிமாவையும் தாண்டி பல்வேறு மொழிகளில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது மேலும் இந்த திரைப்படம் ஹெச்டி தரத்தில் வேற லெவல் இருந்ததால் அனைவருக்கும் பிடித்த படமாக இது மாறியது அதோடு மட்டுமல்லாமல் வசூலிலும் அடித்து நொறுக்கியது KGF.
முதல் பாகம் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து உடனடியாக பிரசாந்த் நீல் இரண்டாவது பாகத்தையும் எடுத்தார் இந்த படம் எடுக்கப்பட்டு இருந்தாலும் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருவதால் படம் ரிலீஸ் தேதி மட்டும் தள்ளிக்கொண்டே போய் கொண்டிருக்கிறது இந்த நிலையில் இந்த படத்தின் நாயகன் யாஷ் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து
கூறிய நிலையில் படக்குழுவும் கேஜிஎஃப் இரண்டாம் பாகத்தில் இடம்பெற்ற யாஷின் புதிய போஸ்டர் வெளியீட்டு வாழ்த்துக்களை கூறி உள்ளது ரசிகர்களும் இந்த புகைப்படத்தை சமூக வலைதள பக்கங்களில் வெளியீட்டை கொண்டாடி வருகின்றனர். கேஜிஎஃப் இரண்டாவது பாகம் வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதோ அந்த புகைப்படம்.