திடீரென மாற்றப்பட்ட லியோ பட ரிலீஸ் டேட்.. சிறப்புக் காட்சி எப்பொழுது தெரியுமா?

leo movie
leo movie

Leo Movie Update: நடிகர் விஜய்யின் லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி அன்று வெளியாகுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ரிலீஸ் தேதி மாற்றி வைக்கப்பட்டுள்ளது. விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் உருவாகி இருக்கும் நிலையில் இந்த படத்தின் அப்டேட்டுகள் தொடர்ந்து இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகமடைய வைத்து வருகிறது.

அப்படி தற்பொழுது வரையிலும் போஸ்டர்கள், பாடல்கள், ட்ரெய்லர் போன்றவை வெளியாகியிருக்கும் நிலையில் அனைத்தையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். லியோ படத்தின் பாடலில் விஜய் சிகரெட் குடிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்று இருந்ததால் இதனால் பார்க்கும் சிறியவர்களின் மனநிலை பாதிக்கப்படும் என சர்ச்சை எழுந்தது.

இந்த சூழலில் ட்ரைலரில் சில ஆபாசமான வார்த்தைகள் இடம் பெற்றிருப்பதால் அதனை நீக்க வேண்டும் என போலீசாரில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது. இவ்வாறு தொடர்ந்து லியோ படத்திற்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து கொண்டிருக்கிறது. லியோ பட ட்ரைலர் ரோகிணி திரையரங்குகளில் வெளியான நிலையில் விஜய்யின் ரசிகர்கள் ஏராளமானவர்கள் ரோகிணி திரையரங்கில் குவிந்தனர்.

அங்கு 10 லட்சம் மதிப்புள்ள இருக்கைகள் அனைத்தையும் அடித்து நொறுக்கி நாசம் செய்துள்ளனர். இவ்வாறு இந்த பிரச்சனைகள் ஒருபுறம் இருந்தாலும் லியோ ட்ரெய்லர் வெளியான 24 மணி நேரத்திற்குள் பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது. தற்பொழுது லியோ படத்தின் ரிலீஸ் தெரியும் மாற்றி வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி லியோ வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது ஆனால் தற்பொழுது சிறப்புக் காட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் முன்தினமே 18ம் தேதி மாலை மற்றும் இரவு காட்சிகள் 1000 திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.