தமிழ் சினிமாவில் சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று போன்ற பல்வேறு திரைப்படங்களை இயக்கிய நேர்கொண்ட பார்வை என்ற திரைப்படத்தின் மூலம் சிறந்த இயக்குனராக பிரதிபலித்தவர் தான் வினோத். இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் தற்போது தல அஜித்தை வைத்து வலிமை என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தினை போனிகபூர் தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக இந்த திரைப்படத்தை தயாரிப்பது மட்டுமில்லாமல் யுவன் சங்கர் ராஜாதான் இசை படத்திற்கு இசையமைத்து வருகிறார்.இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படம் 2 ஆண்டுகளாக படப்பிடிப்பில் இருப்பதன் காரணமாக ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் இத் திரைப்படமானது முழுக்க முழுக்க ஆக்ஷன் கதையம்சம் உள்ள படமாக அமைந்துள்ளது.அந்த வகையில் இத்திரைப்படம் முதலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தான் வெளியிட போவதாக செய்திகள் வெளிவந்தது ஆனால் தற்சமயம் பொங்கலுக்கு இந்த திரைப்படத்தை வெளியிட உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.
மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து தல அஜித் நடிக்கும் தன்னுடைய 61 திரைப்படத்தையும் வெச்சி வினோத்து தான் இயக்கப் போகிறார் என்றும் போனிகபூர் தான் தயாரிக்கப் போகிறார் என்றும் செய்திகள் வெளியாகின. மேலும் இந்த திரைப்படத்தில் இசையமைப்பாளராக யுவன்தான் இசை அமைக்க இருந்ததாக கூறப் பட்டிருந்தது.
ஆனால் திடீரென இத்திரைப்படத்தில் யுவன் இசையமைகாமல் அவருக்கு பதிலாக அனிருத் அவர்கள் தேர்வாகி உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் இத்திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.