சத்யராஜின் குடும்பத்தில் ஏற்பட்ட திடீர் மரணம்.! சோகத்தில் குடும்பத்தினர்கள்..

sathyaraj
sathyaraj

Actor Sathyaraj: பிரபல நடிகர் சத்யராஜின் தாயார் நாதாம்பாள் சுப்பய்யா இன்று காலமானார். தமிழ் சினிமாவிற்கு வில்லனாக அறிமுகமாகி சில திரைப்படங்களில் நடித்து பிரபலமான சத்யராஜ் ஒரு கட்டத்தில் ஹீரோவாக நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்றார். அப்படி இவர் ஹீரோவாக நடித்த திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியினை பெற்றது.

தன்னுடைய காமெடியினால் ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்த சத்யராஜ் தற்போது வரையிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். மேலும் பாகுபலி திரைப்படத்தில் இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்தது. வயதான காரணத்தினால் குணசேத்திர கேரக்டர்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் சத்யராஜின் தாய் நாதாம்பாள் வயது மூப்பின் காரணமாக ஏற்பட்ட பிரச்சனை நாள் கடந்த சில வருடங்களாகவே அவதிப்பட்டு வந்தார். இந்த சூழ்நிலையில் இன்று மாலை 4 மணி அளவில் காலமானதாக தகவல் வெளியாகி உள்ளது. தனது 94 வயதில் காலமாகி இருக்கும் நிலையில் இவர் கோவையில் வசித்து வந்தார் அங்கு தான் உயிரிழந்து உள்ளார்.

sathyaraj mother
sathyaraj mother

நடிகர் சத்யராஜ் இவருடைய ஒரே மகனாவார். மேலும் கல்பனா மன்றாடியார், ரூபா சேனாதிபதி ஆகிய இரு மகள்களும் உள்ளனர். நடிகர் சத்யராஜ் படப்பிடிப்பிற்காக ஹைதராபாத்தில் இருந்து வரும் நிலையில் தாயாரின் மறைவு குறித்து தகவல் வந்ததால் கோவை சென்று உள்ளார். இவரின் இறுதி சடங்குகள் அனைத்தும் சொந்த ஊரான கோவையில் தான் நடைபெறும் என கூறப்படுகிறது.