சித்ராவிற்கு இப்படி ஒரு தீவிர ரசிகையா. பசங்களையே ஓரங்கட்டிடாங்களே. வைரலாகும் புகைப்படம்..

chitra-vj-tammil360newz

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர் சீரியலின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகை சித்ரா. இவருடைய மறைவு பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இவர் தற்கொலை செய்து கொண்டார் என்பதை பலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே இவருடைய கணவர் ஹேம்நாத் சித்ராவிடம் மிகவும் சண்டை போட்டதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார் என்று போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

இந்நிலையில் இவர் நடித்து வந்த பாண்டியன் ஸ்டோர் சீரியலின் மூலம் முல்லை கேரக்டரில் நடித்தது இவருக்கு அமோக வெற்றியை தந்தது என்று தான் கூற வேண்டும் ஏனென்றால் இதன் பிறகு இவருக்கு பல ரசிகர்கள் ஆதரவு அளித்து வந்தார்கள். இல்லத்தரசிகளின் மனதிலும் நீங்கா இடம் பிடித்தார்.

பிறகு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இவருக்கு பிறகு யார் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் பாரதிகண்ணம்மா சீரியல் அறிவு என்ற கேரக்டரில் நடித்து வந்த காவியா தற்போது நடித்து வருகிறார். இவரும் ரசிகர்கள் மத்தியில் சித்திரா அளவிற்கு பிரபலம் அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் சித்ராவின் கனவான கால்ஸ் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.இப்படம் இன்னும் சில நாட்கள் ரிலீசாக உள்ளது. எனவே ரசிகர்கள் சித்ராவை இன்னும் miss செய்வதாக தங்களது கமெண்டுகளை சோசியல் மீடியாவில் தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் நடிகை சித்ரா சித்து என்று எழுதி மைக் தோல் பச்சை குத்தி இருப்பார். அதேபோல் ரசிகை ஒருவரும் பச்சை குத்தி சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த பல ரசிகர்கள் சித்ரா நீ மண்ணை விட்டு போனாலும் எங்கள் மனதில் இருந்து தான் வருகிறாய் என்ற பல கமெண்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.இதோ அந்த புகைப்படம்.

chithra
chithra