திரை உலகில் நடிக்கின்ற அனைவர்களும் நல்ல நிலைமையில் இருக்கிறார்கள் என்றால் அது கேள்விக்குறி தான் பெரும்பாலும் ஹீரோ, ஹீரோயின்கள் தான் அதிகம் சம்பளம் வாங்கி வாழ்க்கையை என்ஜாய் பண்ணுகின்றனர் ஆனால் குணச்சித்திரம் மற்றும் ஐட்டம் டான்ஸ், காமெடி கதாபாத்திரங்களில் நடிப்பவர்கள் மிகப்பெரிய சம்பளம் கிடையாது.
தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்தால் மட்டுமே அவர்கள் நல்ல நிலைமையில் இருக்க முடியும்.. பெரும்பாலும் குணச்சத்திர மற்றும் ஐட்டம் டான்ஸ், காமெடி என நடிப்பவர்கள் சொந்த வீடு சார் என எதுவுமே இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரை தான் பார்க்க இருக்கிறோம் அந்த நடிகர் வேறு யாரும் அல்ல.. சசிகுமார் சுப்பிரமணி.
இவர் தனது சினிமா ஆரம்பத்தில் டாப் ஹீரோக்களான விஜய் தொடங்கி பல ஹீரோக்களின் படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், வில்லனாகவும் நடித்தவர். 2001 ஆம் ஆண்டு இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் வெளியான ஆனந்தம் திரைப்படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்தார்.
அதனைத் தொடர்ந்து நடிகர் விஜயின் நடிப்பில் வெளியான ஷாஜகான் திரைப்படத்தில் விஜய் நண்பராக நடித்தார். அந்த படத்தின் கதையே அவரை வைத்து தான் நகரும் அந்த அளவிற்கு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார் அதன் பிறகு பிராமண்ட இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான கன்னத்தில் முத்தமிட்டார் திரைப்படத்தில் தற்கொலை படை தீவிரவாதியாக நடித்திருப்பார், மாதவன் நடிப்பில் வெளியான ஜேஜே திரைப்படத்திலும் ஹீரோயினை காதலிக்கும் ஒரு அப்பாவியாக அவர் நடித்து இருப்பார்.
தொடர்ந்து டாப் ஹீரோயின் படங்களில் தலைகாட்டி ஓடிய இவர் ஒட்டுமொத்தமாக 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார் ஆனால் தற்பொழுது பட வாய்ப்பு கிடைக்கவில்லை மேலும் சொந்த வீடு கூட இல்லாமல் வாடகை வீட்டில் வசித்து வருகிறாராம் சொந்தக்கமாக கார் கூட இல்லை என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.