ஸ்ரீ திவ்யா அவர்களுக்கா இப்படி ஒரு நிலைமை.! உச்சிக் கொட்டும் ரசிகர்கள்.

sri-divya
sri-divya

தமிழ், தெலுங்கு திரைப்பட நடிகையாக சினிமாவில் வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஸ்ரீதிவ்யா. இவர் திரையுலகில் எளிதில் பிரபலமடைந்தார். ஆனால் தற்போது பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் தள்ளாடி வருகிறாராம்.

ஸ்ரீ திவ்யா தனது மூன்று வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்கு அறிமுகமானாராம்.  இந்த வகையில் தெலுங்கு திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக பத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளாரார்.இவர் தனது சின்ன வயதில் இருந்தே நடிக் ஆரம்பித்ததால் இவருக்கு நடிப்பு என்றாலே அத்தகுடி தான்.

இவர் பொதுவாக அமைதியானவர்.ஆனால் நடிப்பு என்று வந்துவிட்டால் அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல் தன்னை மாற்றிக் கொண்டு சிறப்பாக தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி விடுவாராம். அந்த வகையில் இவரின் நடிப்பு திறமையையும், சுட்டி தனத்தையும் பார்த்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அந்தவகையில் 2010ஆம் ஆண்டு மனசாரா என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தார். ஆனால் இந்த படம் இவருக்கு பெரும் வெற்றியைத் தரவில்லை தோல்வியை தான் தழுவியுள்ளது.

இதனைத் தொடர்ந்து மாருதி இயக்கிய பஸ் ஸ்டாப் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் இவருக்கு இயக்குனர் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் மிகவும் பேமஸ் ஆனார்.  அதுமட்டுமல்லாமல் இப்படத்திற்கு பிறகு தான் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவானது.

இவ்வாறு இவர் பேமஸ் ஆன சில நாட்களிலேயே தமிழ் சினிமாவில் பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.  அந்த வகையில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் மூலம் முதன் முதலில் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

sri divya 1
sri divya 1

இதனைத்தொடர்ந்து ஸ்ரீதிவ்யா பென்சில், காக்கிசட்டை,வெள்ளக்காரதுரை உட்பட இன்னும் பல படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இப்படத்திற்குப் பிறகு இவருக்கு படவாய்ப்புகள் குறைந்து கொண்டே வந்தது.

இதற்கு முக்கிய காரணம் என்றால் நடிகை ஸ்ரீதிவ்யா நடித்த அனைத்து படங்களிலும் குடும்பப்பாங்கான நடிகையாக தான் நடித்து வந்தார்.  எனவே இவர் கவர்ச்சியாக நடிக்கவில்லை என்பதால் தான் இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. அந்தவகையில் இவர் கடைசியாக நடிகர் ஜீவாவுடன் இணைந்து சங்கிலி புங்கிலி கதவ தொற  திரைப்படத்தில் நடித்திருந்தார்.

தற்பொழுது ஸ்ரீதிவ்யா கவர்ச்சியில் ஆர்வம் காட்டினால் மட்டுமே சினிமாவில் நிலைக்க முடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இது ஒருபுறம் இருந்தாலும் இவர் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிடுவதை வைத்து தான் இவர் இருக்கிறார் என்பதே தெரிகிறது. இவர் விரைவில் கவர்ச்சி நடிகையாக சினிமாவிற்கு அறிமுகமாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.