தளபதி விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து தனது 66-வது திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு வாரிசு என பெயர் வைக்கப்பட்டுள்ளது இயக்குனர் வம்சி இந்த படத்தை இயக்கி வருகிறார் மிகப் பிரமாண்ட பொருள் செலவில் தில் ராஜூ தயாரிக்கிறார். வாரிசு படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்த..
நிலையில் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது விஜயின் வாரிசு திரைப்படம் அடுத்த வருடம் பொங்களன்று வெளியாக இருக்கிறது இதனை தொடர்ந்து அண்மை காலமாக வெற்றி படங்களை கொடுத்து அசத்தி வரும் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்து தளபதி 67 திரைப்படத்தில் விஜய் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தளபதி 67 திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு கேங்ஸ்டர் திரைப்படம் ஆகியிருக்கும் என ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் சொல்லி உள்ளார். இதனால் இந்தப் படத்தை பற்றிய அப்டேட்டுகளை தெரிந்து கொள்ள ரசிகர்களும் காத்துக் கொண்டே இருக்கின்றனர் ஆனால் தற்போது தகவல் வெளிவருவது என்னவென்றால் தளபதி 67 படத்தின் கதையை விறுவிறுப்பாக எழுதி வருகிறார்.
லோகேஷ் இந்த படத்தில் ஆறு விலங்குகள் என ஏற்கனவே சொல்லப்பட்ட நிலையில் தற்போது கைதி படத்தில் எப்படி பாடல்களில்லையோ அதேபோல தளபதி 67 திரைப்படமும் ஒரு ஆக்சன் திரைப்படம் என்பதால் இந்த படத்திலும் பாடல் இடம் பெற வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது. ஆனால் பின்னணி இசைகள் பயங்கரமாக இருக்கும் என ஒரு தகவல் வெளிவந்துள்ளது.
விஜயின் படங்களில் கதைகளும் சரியில்லை என்றாலும் அவரது நடனம் மற்றும் பாடல் போன்றவை அந்த படத்தை ஹிட் அடிக்க வைத்து விடும் ஆனால் தளபதி 67 திரைப்படத்தில் பாடல்கள் இல்லாதது விஜய் ரசிகர்களுக்கு சற்று கஷ்டத்தை கொடுக்கும் என பலரும் கூறி வருகின்றனர். தளபதி 67 திரைப்படத்திற்கு இசையமைக்க அனிருத் அதிகம் வைப்பு இருப்பதாக கூறப்படுகிறது காரணம் லோகேஷ் கனகராஜ் அண்மைக்காலமாக அனிருத் உடன் பயணித்துக் கொண்டிருக்கிறார்.