தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகை என்பது குறிப்பிடத்தக்கது இவர் தனது சினிமா பயணத்தை ஆரம்பத்தில் இருந்து இப்பொழுது வரையிலும் உச்ச நட்சத்திர நடிகர்களின் படங்களில் நடிப்பதும் இல்லை..
என்றால் சோலோவாக படங்களில் நடிப்பதையும் வழக்கமாக வைத்துள்ளார் இதனால் நயன்தாரா எப்பொழுதுமே உச்சத்திலேயே இருக்கிறார். இப்பொழுது கூட லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா பல்வேறு முன்னணி நடிகரின் படங்களில் நடித்து வருகிறார். சினிமா உலகில் வெற்றியை ருசித்து ஓடிக் கொண்டிருந்த இவர் சில ஆண்டுகளாக இயக்குனர் விக்னேஷ் சிவனை..
காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் ஒன்பதாம் தேதி உறவினர்கள் நண்பர்கள் என அனைவரது முன்னிலையிலும் திருமணம் செய்து கொண்டார். தற்பொழுது இந்த ஜோடி சினிமா, வாழ்க்கை என சூப்பராக பயணித்துக் கொண்டிருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஹிந்தி பக்கம் தற்பொழுது அடி எடுத்து வைத்துள்ளார்.
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது இந்த படத்தில் விஜயும் ஒரு கேமியோ ரோலில் நடிக்கிறார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான் இந்த நிலையில் ஜவான் படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு..
எந்த மாதிரியான கதாபாத்திரம் என்பது குறித்தும் ஒரு தகவல் கிடைத்து உள்ளது அதன்படி பார்க்கையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு இந்த படத்தில் ஒரு சிறை கைதி கதாபாத்திரத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது இந்த கதாபாத்திரம் ஒரு சர்ப்ரைஸ் ஆனா கதாபாத்திரமாக படத்தில் இருக்கும் என சொல்லப்படுகிறது ஆனால் இதுவரை படகுழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.