30 வயது நடிகையுடன் இப்படி ஒரு உறவா..? இசையமைப்பாளர் அனிருத் இப்படிப்பட்டவரா..?

anirudh

தென்னிந்திய திரையுலகில் டாப் இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் இசையமைப்பாளர் அனிருத் இவர் பல திரைப்படங்களில் இசையமைத்தது தனக்கான ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். இதனை தொடர்ந்து இசையமைப்பாளர் அனிருத் கடந்த ஆண்டு பல திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார் அதிலும் குறிப்பாக விக்ரம், காத்துவாக்குல ரெண்டு காதல், பீஸ்ட், என பல படங்களின் ஆல்பம் ரசிகர் மத்தியில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களுக்கு இசையமைத்து வரும் இசையமைப்பாளர் அனிருத் பல சர்ச்சைகளிலும் சிக்கி உள்ளார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அந்த வகையில் முதலில் நடிகை ஆண்ட்ரியாவும் அனிருத்தும் காதலித்து வந்தனர். இவர்களுடைய நெருக்கமான ஒரு புகைப்படம் இணையத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்தது.

அதன் பிறகு  அனிருத்திற்கும் ஆண்ட்ரியாவிற்கும் இடையே இருந்த காதல் முறிந்தது. இதற்கு ஒரு பிரமோஷன் நிகழ்ச்சியில் கூட அனிருத் அவர்கள் விளக்கம் அளித்து இருப்பார். அதன் பிறகு பல நடிகைகளுடன் கிசுகிசுவில் சிக்கி வந்த இசையமைப்பாளர் அணிருத் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் உடன் கிசுகிசுக்கப்பட்டார்.

anirudh
anirudh

அது மட்டுமல்லாமல் நடிகை கீர்த்தி சுரேஷ்சும் அனிருத்தம் இரவு பார்ட்டியை முடித்துவிட்டு ஒன்றாக இருந்த ஒரு புகைப்படம் இணையத்தில் வெளியாகி அதுவும் மிகப்பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்தது. இதனைத் தொடர்ந்து தற்போது மேலும் ஒரு சர்ச்சை அனிருதத்தை சுற்றி வருகிறது.

அதாவது இசையமைப்பாளர் அனிருத் அவர்கள் தற்போது 30 வயது உடைய திருமணம் ஆகாத நடிகையை காதலித்து வருவதாகவும் விரைவில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் சில சர்ச்சைகள் வெளியானது. ஆனால் இந்த சர்ச்சைகளுக்கு ஒரே அடியாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார் அந்த 30 வயது நடிகை.

அதாவது எங்களுக்கு இடையே எந்த ஒரு தவறான உறவும் இல்லை நாங்கள் இருவரும் நண்பர்கள் தான் காதலர்கள் கிடையாது என்று அந்த நடிகை கூறினார். அதன் பிறகு தான் இந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது.