தமிழ் சினிமாவில் முன்னணி பிரபலங்களாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் சூர்யா மற்றும் ஜோதிகா இவர்களைப் போலவே சினேகா மற்றும் பிரசன்னா அஜித் ஷாலினி ஆகிய பலரும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள்தான். இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சூர்யா அவர்கள் ஜோதிகாவுடன் இணைந்து சுமார் ஏழு திரைப்படங்களுக்கும் மேலாக நடித்துள்ளார்.
இவ்வாறு தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது இவர்களுக்குள் காதல் ஏற்பட்டது மட்டுமில்லாமல் 2006 ஆம் ஆண்டு இவர்கள் 16ஆம் தேதி செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார்கள் இவர்களுடைய திருமணம் இரு வீட்டார் சம்மதத்துடன் நடைபெற்ற திருமணம் ஆகையால் பல்வேறு பிரபலங்களும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டார்கள்.
இவ்வாறு திருமணத்திற்கு பிறகு தியா மற்றும் தேவ் என இரண்டு குழந்தைகளுக்கு பெற்றோரான நமது காதல் தம்பதிகள் சினிமாவில் என்றும் பிரபல நடிகர்களாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் ஆனால் இவர்களுடைய குழந்தைகளை இதுவரை சினிமாவில் காட்டியதே கிடையாது ஆனால் இவருடைய மகள் தியா டென்னிஸ் மற்றும் கால்பந்து விளையாட்டில் மிக ஆர்வமாக இருப்பது மட்டுமில்லாமல் கிரிக்கெட்டிலும் கை சிறந்தவர்.
அதுமட்டுமில்லாமல் அவருடைய சகோதரியை போல தேவ் கராத்தே கலையில் மிகச் சிறந்து விளங்கி வருகிறார் அந்த வகையில் தேசிய அளவில் நடந்த கராத்தே போட்டியில் கலந்துகொண்டு சூர்யாவின் மகன் வெற்றி அடைந்தது மட்டுமில்லாமல் அவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது மேலும் அந்த புகைப்படத்தில் அவர் சூர்யாவின் தோளுக்கு மேல் வளர்ந்து உள்ளது பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்த உள்ளது.
இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் சூர்யா விக்ரம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படத்தில் கமலஹாசன் கதாநாயகனாக இருந்தாலும் கடைசியில் ஒரே சீனில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்தது என்றால் அது சூர்யாதான் மேலும் ஏற்கனவே சூர்யாவின் திரைப்படம் ஒன்று கைவிடப்பட்ட நிலையில் அந்த திரைப்படம் தற்போது மீண்டும் உருவாக உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.