தளபதி விஜய்க்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய மார்க்கெட் இருக்கிறது அதே சமயம் தெலுங்கு, கன்னடம், கேரளா போன்றவற்றிலும் இவருக்கு ரசிகர்கள் அதிகம் அதனால் அங்கேயும் இவரது படம் அசால்டாக வெற்றியை பதிவு செய்வதோடு மட்டுமல்லாமல் நல்ல காசு படத்துக்கு வருகிறது.
இந்த நிலையில் தான் வம்சி சொன்ன வாரிசு கதை ரொம்ப பிடித்துப் போகவே உடனடியாக தெலுங்கு இயக்குனர் என்று கூட பார்க்காமல் கைகோர்த்து நடித்தார். இந்த படம் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது ஆனால் படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று படம் ஓடியது.
ஆனால் வசூலில் எந்த குறையும் வைக்கவில்லை தொடர்ந்து துணிவு படத்திற்கு நிகராக நல்ல வசூலை அள்ளி வந்தது போகப் போக துணிவையே பீட் பண்ணி 300 கோடிக்கு மேல் வசூல் அள்ளியதாக வாரிசு படக்குழு அதிரடியாக அறிவித்தது. இதன் மூலம் வாரிசு திரைப்படம்..
மிகப்பெரிய ஒரு லாபத்தை அள்ளி இருக்கும் என பலரும் கணக்கு போட்டனர். ஆனால் தற்பொழுது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால்.. தில் ராஜுவின் சொந்த இடமான ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கிட்டதட்ட 100 கோடி வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் 50 கோடி ஷேர் மட்டுமே தில் ராஜுவுக்கு கிடைத்ததாம்..
தமிழ்நாட்டு நிலவரம் லலித் குமார் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை 60 கோடிக்கு வாங்கியிருந்தார் ஆனால் ஷேர் இதுவரை மட்டுமே 67 கோடி தான் கிடைத்துள்ளது இதன் மூலம் 7 கோடி மட்டுமே லலித்குமாருக்கு லாபம் கிடைத்திருக்கிறதாம். ஆனால் அதுவும் முழுசாக போய் சேர்ந்ததா என்று தெரியவில்லை மொத்தத்தில் வாரிசு படக்குழு எதிர்பார்த்ததில் பாதி தான் கிடைத்துள்ளதாம். இதனால் தில் ராஜு புலம்பி வருகிறாராம்.