ஒரு நடிகை ஹீரோயின் என்ற அந்தஸ்தை பெற்ற பிறகு தொடர்ந்து ஹீரோயின்னாகவே நடிப்பார்கள் ஆனால் ஒரு சில நடிகைகள் மட்டும் நல்ல கதாபாத்திரம் இருந்தால் ஹீரோயின் என்ற இமேஜையும் பார்க்காமல் நடிப்பார்கள் அந்த லிஸ்ட்டில் முதன்மையானவராக பார்க்கப்படுபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
ஆரம்பத்தில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதில் பிரபலமடைந்த இவர் ஒருகட்டத்தில் ஹீரோயின்னாக அவதாரம் எடுத்தார் அன்றிலிருந்து இன்று வரை நல்ல நல்ல படங்களில் நடித்து வந்தாலும், அவ்வபோது குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடிப்பதால் இவரது மார்க்கெட் உச்சத்திலேயே இருக்கிறது.
சரியாக சொல்ல வேண்டும் என்றால் நயன்தாராவுக்கு நிகராக ஐஸ்வர்யா ராஜேஷ் சேர்த்து வைத்து பேசுகின்றனர். இப்படி ஓடிக்கொண்டிருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அண்மையில் இயக்குனர் கிங்ஸ்லீ உடன் கைகோர்த்து டிரைவர் ஜமுனா என்ற திரைப்படத்தில் நடித்தார் அந்த படம் கடந்த டிசம்பர் 30ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது.
ஆனால் முதல் நாள் முதல் காட்சியிலேயே இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றதால் குறைந்த வசூலை அள்ளி திரையரங்குகளில் இருந்து தூக்கப்பட்டது இருப்பினும் படக்குழு அதை ஒரு பெரிய பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல் சக்சஸ் மீட் வைத்து கொண்டாடி இருக்கிறது. இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் இயக்குனர் மற்றும் பல முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
அதன் புகைப்படம் இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது இதைப் பார்த்த ரசிகர்கள் பெரிய நடிகர்கள் எப்படி ஓடாத படத்திற்கு சக்சஸ் மீட் வைப்பார்களோ அதே போல இப்பொழுது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பண்ணுகிறார் எனக்கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர். இதோ அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..